Home இந்தியா ஜக்கி வாசுதேவ் டுவிட்டர் நடவடிக்கையைக் கண்டனம் செய்தார்

ஜக்கி வாசுதேவ் டுவிட்டர் நடவடிக்கையைக் கண்டனம் செய்தார்

593
0
SHARE
Ad

சென்னை : பிரபல ஆன்மீகக் குருவும் ஈஷா அறவாரியத்தின் தோற்றுநருமான ஜக்கி வாசுதேவ் டுவிட்டரின் அண்மைய நடவடிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

வங்காளதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்கள் அண்மையில் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து வங்காளதேசத்தில் செயல்படும் இஸ்கோன் (ISKCON) என்ற கிருஷ்ண பக்தி விழிப்புணர்வு இயக்கத்தின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிர்வாகம் இடைக்காலத் தடைவிதித்து மூடியது.

“வன்முறை செய்தவர்களைப் பாதுகாப்பது, பாதிக்கப்பட்டவர்களைத் தண்டிப்பது. இதுதான் டுவிட்டர் நிர்வாகத்தின் நேர்மையா?” என இன்று புதன்கிழமை (அக்டோபர் 20) தனது டுவிட்டர் பக்கத்தில் ஜக்கி வாசுதேவ் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்கோன் இயக்கத்தின் வங்காளதேசப் பிரிவின் டுவிட்டர் தளம் முடக்கப்பட்டதாக இஸ்கோன் அறிவித்தது.

அதே போன்று வங்காளதேச இந்து ஒற்றுமை மன்றத்தின் டுவிட்டர் தளத்தையும் டுவிட்டர் நிர்வாகம் முடக்கியது.

இஸ்கோன் மையமும் அதன் பொறுப்பாளர்களும் அண்மையில் வங்காளதேசத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் தாக்கப்பட்டனர்.

இந்தியாவின் இஸ்கோன் இயக்கத்தின் தொடர்புத் துறை இயக்குநரான கோவிந்த தாஸ் தனது நடவடிக்கையை டுவிட்டர் பொதுவில் விளக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரத்தில் நவராத்தி விழாவின்போது இந்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. குறைந்தது 20 இந்துக்களின் இல்லங்கள் மீது தீ வைக்கப்பட்டன. இஸ்லாமிய சமயத்திற்கு எதிரான பதிவு ஒன்றைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் குறிப்பிட்டன.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal