Home கலை உலகம் ஆஸ்ட்ரோ: அதிகமானத் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் முதல் ஒளிபரப்பு

ஆஸ்ட்ரோ: அதிகமானத் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் முதல் ஒளிபரப்பு

663
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில்  உள்ளூர் மற்றும் அனைத்துலக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம்.

#ஒளியாய்திகழ்வோம் என்ற இவ்வாண்டுக் கருப்பொருள், நம் சமூகங்களில் நாம் பார்க்க விரும்பும் உத்வேகமூட்டும் மாற்றமாய் திகழ்வோம் என்ற கருத்தை ஊக்குவிக்கிறது. மின்னியல் தளமான ஆஸ்ட்ரோ உலகம், ராகா வானொலி மற்றும் ஈ-காமர்ஸ் தளமான கோ ஷாப் ஆகியவற்றில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை அனைத்து மலேசியர்களும் அனுபவித்து மகிழலாம்.

பிரேம் ஆனந்த், ஆஸ்ட்ரோ

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “இவ்வாண்டு நாங்கள் தீபாவளி மற்றும் ஆஸ்ட்ரோவின் 25-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் தருணத்தில், ​​எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் அற்புதமான நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்வதை உறுதிச் செய்ய உயர்தர உள்ளூர் மற்றும் அனைத்துலக முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளின் அற்புதமானக் கலவையை நாங்கள் வழங்குகிறோம். டெலிமூவிக்கள், பல்வேறு நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், நகைச்சுவை விவாத நிகழ்ச்சிகள்,பயணக்கதைகள், வலைத்தள தொடர்கள் எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை இப்பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். தொற்றுநோய் காலக்கட்டத்தில் எதிர்க்கொண்டச் சவால்களுக்கு மத்தியில் எங்களின் வாடிக்கையாளர்களின் வற்றாத ஆதரவைப் பாராட்டும் வண்ணம் அவர்களுக்குச் சிறந்த உள்ளடக்கங்களை வழங்க மிகவும் அற்புதமான உள்ளடக்கத் தேர்வுகளை வழங்கும் உள்ளூர் திறமையாளர்கள் மற்றும் தயாரிப்புகளைத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகக் கையாண்டு அதில் முதன்மை வகித்துப் பீடு நடைப் போடுகிறோம்” என்றார்.

#TamilSchoolmychoice

முதல் ஒளிபரப்புக் காணும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ வானவில் எச்டி-இல் (அலைவரிசை 201) அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் கண்டுக் களிக்கலாம்:

உள்ளூர் திறமையாளர்களான கீதா மற்றும் உதயா (ராகா) தொகுத்து வழங்கும் வீட்டுக்கு வீடு தீபாவளி எனும் உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சியில் டாக்டர் விமலா பெருமாள், டேனேஸ் குமார், ஹேமாஜி, மூன் நிலா, நித்யா ஸ்ரீ என ‘தமிழ்லட்சுமி’ தொடரின் பிரபலத் திறமையாளர்கள் மற்றும் இயக்குநர் பங்குப் பெறுவர்;

உள்ளூர் திறமையாளர்களான ஆனந்தா மற்றும் ரேவதி தொகுத்து வழங்கும் கலக்கல் ஜோடிகள் எனும் உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சியில் பென் ஜி, பிரகாஷ் மற்றும் பலர் இடம் பெறுவர்.

உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் சதீஷ் நடராஜன் இயக்கிய மற்றும் இர்பான் ஜைனி, ஷாலினி பாலசுந்தரம், வெமனா மற்றும் பலர் நடித்த உள்ளூர் காதல் நகைச்சுவை டெலிமூவியானப் பல்லவி பேக்கரி;

ஸ்ரீ குமரன், விடியா லியானா, கிருத்திகா மற்றும் பலர் நடித்த எஸ்.டி.புவனேந்திரனின் உள்ளூர் நகைச்சுவை நாடக டெலிமூவியானச் சொப்பன சுந்தரி;

சாரா பாஸ்கின், தேவகுரு, மற்றும் பலர் நடித்த, யுவராஜ் கிருஷ்ணசாமி இயக்கிய உள்ளூர் குடும்ப நாடக டெலிமூவியான மனமே கேட்கவா.

சிங்கப்பூர் குடும்ப டெலிமூவியானப் புகைப்படம், மற்றும் குடும்ப நாடக டெலிமூவியான எனக்கு 25 உனக்கு
சசி, பிரசாத் மற்றும் சந்தினி கோர் உள்ளிட்டப் பிரபலமான உள்ளூர் திறமையாளர்களைத் தாங்கி மலரும் அனல் பறக்குது எனும் பிரபல உள்ளூர் சமையல் நிகழ்ச்சியின் தீபாவளி சிறப்பு அத்தியாயம்.

முதல் ஒளிபரப்புக் காணும் பின்வரும் நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி-இல் (அலைவரிசை 202) எதிர்பார்க்கலாம்:

பிரபல உள்ளூர் கலைஞர்களான ஹேவோக் நவீன், ஹேவோக் மதன், பாஷினி, கேசவன் மற்றும் ஷீஸே நடித்த, கிரன் பிரசாந்த் இயக்கிய உள்ளூர் நகைச்சுவை டெலி-நாடகம், லோக் டவுன்.

ஷேபி மற்றும் பிரசாத் தொகுத்து வழங்கிய உள்ளூர் உணவுப் பயணக்கதையான ரசிக்க ருசிக்க நிகழ்ச்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி.

உள்ளூர் கலைஞர், நதிய ஜெயபாலன் தொகுத்து வழங்கும் தீபாவளி அங் பாவ் நேரலை போட்டி, ரிம10,000 மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் மற்றும் அப்துல் ரசாக் ஜூவல்லர்ஸ் செண்டிரியான் பெர்ஹாட் வழங்கி ஆதரவளித்த 6000 ரிங்கிட் மதிப்புள்ள 24 கிராம் தங்கம் உள்ளிட்ட அற்புதமானப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

உள்ளூர் தயாரிப்புக் குழுக்களால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டப் பல்வேறு நிகழ்ச்சிகளான, பிரபல ஜோடிகளை உள்ளடக்கிய ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் லிடியா தொகுத்து வழங்கும் ஷாப்பிங் கில்லாடீஸ்;

ஜெகன் புருஷோத்தம் மற்றும் நக்ஷத்ரா நாகேஷ் தொகுத்து வழங்கும், தாடி பாலாஜி, அனிதா, தங்கதுரை, ஜெனிபர், பிக் பாஸ் பாலா மற்றும் பலர் பங்குப் பெற்றுச் சிறப்பிக்கும் தீபாவளி ரகலைஸ்.

மதுரை முத்து, தங்கதுரை மற்றும் பலர் பங்குப் பெறும் நகைச்சுவை விவாத நிகழ்ச்சி, காமெடி மன்றம்.
மணிமேகலை, பாடகர் திவாகர் என்ற திவாகரன் சந்தோஷ், கேபி என்ற கேப்ரியெல்லா சார்ல்டன், நக்ஷத்ரா நாகேஷ் மற்றும் பலர் பங்குப் பெறும் சமையல் நிகழ்ச்சிப், பசிகிது லா!!

அஷ்வின், சிவாங்கி, புகழ், ஆரி, பாலாஜி, ரியோ மற்றும் பல உத்வேகமூட்டும் ஐகான்களைக் கொண்டாடும் விருது நிகழ்ச்சி, பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு ஐகான்ஸ்.
புகழ்பெற்றப் பாடகர்களானக் கேஎஸ் சித்ரா, மனோ, மது பாலக்கிருஷ்ணன், விஜய் பிரகாஷ் மற்றும் பலர் பங்குப் பெறும் இளையராஜா 75 – லைவ் இன் கன்சட் சிங்கப்பூர்,

பாராட்டிற்குரியப் பாடகர்களான ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா மோகன், ஜொனிதா காந்தி, ஹரிசரண், கார்த்திக், விஜய் பிரகாஷ் மற்றும் பலர் பங்குப் பெறும் நெஞ்சே எழு – ஏஆர் ரகுமான் லைவ் இன் கோன்சர்ட் உள்ளிட்டப் புகழ்பெற்ற இசை ஜாம்பவான்களைக் கொண்டாடும் இசை நிகழ்ச்சிகள். புகழ்பெற்ற இசை ஐகானின் சிறந்த ஹிட் பாடல்களை இவ்விசை ஜாம்பவான்கள் பாடுவர்.

முதல் ஒளிபரப்புக் காணும் மேலும் பல அனைத்துலக நிகழ்ச்சிகளுக்கு, வாடிக்கையாளர்கள் பின்வரும் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம்:

ஜீ தமிழ் எச்டி-இல் (அலைவரிசை 223) கிகி விஜய் மற்றும் ஆர்ஜே விஜய் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி, மெகா தல தீபாவளி.

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி-இல் (அலைவரிசை 241), ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த நாடகத் திரைப்படம், கசட தபற.

BollyOne HD-இல் (அலைவரிசை 251) விக்ரந்த் மாஸ்ஸே மற்றும் கிருதி கர்பந்தா நடித்தக் காதல் நாடகத் திரைப்படம், 14 பியர் (14 Phere); மற்றும் ராணா டகுபதி, ஜோயா ஹுசைன் மற்றும் பலர் நடித்த அதிரடி நாடகத் திரைப்படம், ஹாத்தி மேரே சாதி (Haathi Mere Saathi).

Astro First-இல் (அலைவரிசை 480) ராய் லக்ஷ்மி, சாக்ஷி அகர்வால் மற்றும் ரோபோ சங்கர் நடித்தத் தமிழ் திகில் திரைப்படம், சிண்ட்ரெல்லா.

மேலும், ஆஸ்ட்ரோ உலகில் முதல் ஒளிபரப்புக் காணும் என்ன கொடுமை சார் இது!  எனும் நகைச்சுவை நாடக வலைத்தளத் தொடரை அனைத்து மலேசியர்களும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம். இத்தொடரில், ரவின் ராவ் சந்திரன் மற்றும் கே.பிரகாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆமோஸ் பால், சபேஷ் மன்மதன், அருளினி ஆறுமுகம், தயாஷ்னி ஆறுமுகம், அனு ரஞ்சனி, ரேவதி மணிமாறன், மெலினா ஆபிரகாம் மற்றும் தர்ஷிகா பிரியா பாடிய, ஷமேஷன் மணி மாறனின் இசையில் மலர்ந்த, கார்த்திக் ஷாமலன் இயக்கிய இசைக் காணொளியைக் கொண்ட, யுவாஜி எழுதியப் பாடல் வரிகளைக் கொண்ட டிவி, ஆஸ்ட்ரோ உலகத்தின் சமூக வலைத்தளங்கள் மற்றும் ராகா வானொலியில் கிடைக்கப் பெறும் #ஒளியாய்திகழ்வோம் எனும் மனதை நெகிழ வைக்கும் தீபாவளிப் பாடலை அனைத்து மலேசியர்களும் எதிர்ப்பார்க்கலாம்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

வானொலி முன்னணியில்,  சந்தேஷ் பாடிய, வானொலி,  SYOK செயலி மற்றும் ராகாவின் யூடியூப் அலைவரிசையில் கிடைக்கப் பெறும் ராகாவின் ஒளியாய் திகழ்வோம் எனும் மனதை வருடும் ராகாவின் பிரத்தியேகத் தீபாவளி பாடலை அனைத்து மலேசியர்களும் கேட்டு மகிழலாம்.

Pertubuhan Perkhidmatan Sosial dan Pembangunan Komuniti Daerah Gombak, Selangor எனும் ஆதரவற்றோர் இல்ல உறுப்பினர்களுக்குப் புகைப்படம் அல்லது காணொளி வாயிலாகத் தீபாவளி வாழ்த்துக்களைப் பகிரும் ராகா மற்றும் LoveMe-உடன் ஒளியாய் திகழ்வோம் என்ற ஒரு சமூக முயற்சியில் நேயர்கள் பங்கேற்கலாம். மேல் விபரங்களுக்கு ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு கோ ஷாப்பின் ‘தீபாவளி பண்டிகை விற்பனை’ (Deepavali Festival Sale) பிரச்சாரம் அக்டோபர் 14  முதல் நவம்பர் 5, 2021 வரை வாடிக்கையாளர்களுக்கு 67% வரைத் தள்ளுபடியை வழங்குகிறது. பண்டிகையை முன்னிட்டு தங்கள் வீட்டைத் தயார் செய்ய வாடிக்கையாளர்கள் வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், தளவாடப் பொருட்கள் மற்றும் படுக்கை சார்ந்தப் பொருட்கள் ஆகியவற்றோடு பிறப் பொருட்களானத் தின்பண்டங்கள், டிஜிட்டல் மின்னணுவியல் பொருட்கள், ஆடை அலங்காரப் பொருட்கள் என பல விதப்  பொருட்களை வாங்க முடியும்.

அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் கோ ஷாப்பின் பிரத்தியேக தீபாவளி நிகழ்ச்சியை ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 1 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டி-இல் (அலைவரிசை 201) நவம்பர் 7, 2021 வரைக் கண்டு களிக்கலாம்.

புதிய வாடிக்கையாளர்கள் முதல் வாங்குதலுக்கு ‘WEL15’ குறியீட்டைப் பயன்படுத்தினால் ரிம15 தள்ளுபடியை அனுபவிக்கலாம். மேல் விபரங்களுக்கு goshop.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரவும் அல்லது Google Play அல்லது App Store-இல் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.

முதல் ஒளிபரப்புக் காணும் ஆஸ்ட்ரோவின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளின் மேல் விபரங்களுக்கு astroulagam.com.my/Deepavali2021 எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal