Home கலை உலகம் ஆஸ்ட்ரோவின் “கதாநாயகி” – புதிய தொலைக்காட்சித் தொடர்

ஆஸ்ட்ரோவின் “கதாநாயகி” – புதிய தொலைக்காட்சித் தொடர்

1133
0
SHARE
Ad

  • உள்ளூர் தமிழ் திகில் நகைச்சுவைத் தொடர் ‘கதாநாயகி’ ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணுகின்றது. ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் பிப்ரவரி 1 முதல் ஒளிபரப்புக் காணுகின்றது

கோலாலம்பூர் – பிப்ரவரி 1, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் கதாநாயகி எனும் சுவாரசியமானத் திகில் நகைச்சுவைத் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

பிரபல உள்ளூர் திரைப்பட இயக்குநர், கபிலன் புலோந்திரன் (‘ராமராஜன்’ மற்றும் ‘அதிகாரி’) கைவண்ணத்தில் மலர்ந்த கதாநாயகி தொடரில் விக்கி ராவ், சுபீர் கான், ‘சீனப்பையன்’ பிளேக் யாப், ரவின் ராவ் சந்திரன், குபேன் மகாதேவன், நிவாஷன் கணேசன், நவீஷா குமார் மற்றும் பல திறமையான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். திரைப்படத் துறையில் புகழின் உச்சத்தை அடைய ஓர் உண்மையானப் பேயைக் கொண்டத் திரைப்படத்தை இயக்கும் அபாயகரமான மற்றும் சிக்கலான வாய்ப்பைப் பெறும் இலட்சியங் கொண்ட மூன்று நண்பர்களின் கதையை இந்தத் தொடர் சித்தரிக்கின்றது.

#TamilSchoolmychoice

கதாநாயகி தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களிக்கலாம் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.