Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : உள்ளூர் தமிழ் மருத்துவத் தொடர் ‘வைரஸ்’ முதல் ஒளிபரப்புக் காணுகிறது

ஆஸ்ட்ரோ : உள்ளூர் தமிழ் மருத்துவத் தொடர் ‘வைரஸ்’ முதல் ஒளிபரப்புக் காணுகிறது

608
0
SHARE
Ad

  • உள்ளூர் தமிழ் மருத்துவத் தொடர் ‘வைரஸ்’ திங்கட்கிழமை ஏப்ரல் 4 முதல் ஆஸ்ட்ரோ விண்மீனில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

கோலாலம்பூர் – திங்கட்கிழமை, ஏப்ரல் 4, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் வைரஸ் எனும் முதல் உள்ளூர் தமிழ் மருத்துவத் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

உள்ளூர் திரைப்பட இயக்குநரான வதனி குணசேகரன் கைவண்ணத்தில் மலர்ந்த, 22-அத்தியாயங்களைக் கொண்டச் சுவாரசியமான இத்தொடரில் ரவின் ராவ் சந்திரன், தேவகுரு சுப்பையா, டிஷாலெனி ஜாக், வெமன்னா அப்பன்னா, சாந்தினி கோர், ஜெயஸ்ரீ விஜயன், தீபன் கோவிந்தசாமி, பர்வின் நாயர் சுரேந்திரன் மற்றும் பல பிரபல உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பாதிக்கப்பட்ட நோயாளிகளின் போதுமானப் பிரணாவாயுவின் அளவைத் தாக்கும் என்சா-ஆர் எனும் நோய்க்கிருமியின் (வைரஸ்) பரவலுக்கு எதிராக இரவும் பகலும் போராடும் மருத்துவ ஊழியர்களின் குழுவைச் சித்தரிக்கின்றது. வைரஸ் தொடர். என்சா-ஆர் நோய்க்கிருமியின் பரவல் தற்செயலாக நடந்ததா அல்லது பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா என்பதுதான் கதையின் மையக்கரு.

வைரஸ் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோ-வில் கண்டு களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.