Home கலை உலகம் ஆஸ்ட்ரோ உலகம் குறும்படப் போட்டி – ஜூலை 31 வரை பங்கேற்கலாம்

ஆஸ்ட்ரோ உலகம் குறும்படப் போட்டி – ஜூலை 31 வரை பங்கேற்கலாம்

515
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோவின் ஊடக அறிக்கை

உலகம் குறும்படப் போட்டியில் இப்போதிலிருந்து ஜூலை 31, 2022 வரைப் பங்கேற்கலாம்

10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்வதோடு ஒரு டெலிமூவித் தயாரிக்கும் வாய்ப்பைப் பெறுங்கள்

‘உலகம் குறும்படப் போட்டியைப்’ பற்றிய விபரங்கள்:

• இப்போதிலிருந்து ஜூலை 31, 2022 வரை நடைப்பெறும் உலகம் குறும்படப் போட்டியில் பங்கேற்று ரொக்கப் பரிசுகளையும் ஒரு டெலிமூவித் தயாரிப்பதற்கான வாய்ப்பையும் பெற அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்.

• பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் பின்வருபவற்றைச் செய்ய வேண்டும்:

#TamilSchoolmychoice

o அசல் 20-நிமிடத் தீபாவளிக் கருப்பொருளைக் கொண்டக் குறும்படம் மற்றும் அதன் போஸ்டரை ஏதாவது இந்திய மொழியில் தயாரிக்க வேண்டும்.

o மேலும் astroulagam.com.my/shortfilmcontest என்ற அகப்பக்கத்தின் வாயிலாகப் பங்கேற்பாளர்கள் போட்டிக்கான நுழைவுப் படிவத்தைப் பூர்த்திச் செய்து, குறும்படம் மற்றும் போஸ்டரை அங்கு சமர்ப்பிக்க வேண்டும்.

• வெற்றியாளர்கள் அசல் தன்மைப், படைப்பாற்றல், நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், வசனம் மற்றும் திரைக்கதை ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்வரும் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.

o முதல் நிலை வெற்றியாளர் 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வதோடு ஆஸ்ட்ரோவில் திரையிடப்படும் ஒரு டெலிமூவியைத் தயாரிப்பதற்கான அரிய வாய்ப்பைப் பெறுவார்.

o இரண்டாம் நிலை வெற்றியாளர் 8,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வார்.

o மூன்றாம் நிலை வெற்றியாளர் 6,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வார்.

o ஏழு ஆறுதல் பரிசு வெற்றியாளர்கள் தலா 3,000 ரிங்கிட் ரொக்கப் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.

• மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.