Home நாடு யுவன் சந்திரசேகர் படைப்புலகம் – வல்லினம் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்ச்சி

யுவன் சந்திரசேகர் படைப்புலகம் – வல்லினம் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்ச்சி

774
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை ஜூன் 11-ஆம் தேதி வல்லினம் ஏற்பாட்டில் “யுவன் சந்திரசேகர் படைப்புலகம்” என்ற சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி கீழ்க்காணும் வகையில் நடைபெறும்:

நாள் : சனிக்கிழமை 11 ஜூன் 2022

நேரம் : மதியம் 1.00 மணிக்கு மதிய உணவு; பிற்பகல் 2.00     மணிக்கு நிகழ்ச்சி தொடக்கம்

இடம் : கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதி, கோலாலம்பூர்

இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சிறப்பு பிரமுகராக கலந்துகொள்கிறார். அவரது படைப்புலகம் குறித்தும் ஆளுமை குறித்தும் அறிய இது ஒரு சிறந்த வாய்ப்பு. நிகழ்ச்சிக்கான செலவினங்களை வல்லினமே ஏற்றுக் கொண்டிருக்கிறது. முன்கூட்டியே பதிவு செய்த பங்கேற்பாளர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கு பெற முடியும்.

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் தமிழில் தனித்துவமான படைப்பாளி. அவருடனான இந்த உரையாடலில் 60 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.