பெண் பாலின உடலரசியல் குறித்த உரையாடல்கள் பெருமளவு ஆண்கள் பெண்ணுடலைப் பொருளாக, நுகர்வுக்குரியதாகப் பார்ப்பதாக சொல்லப்படும் பார்வையின் எதிர்விசையில் பயணிக்கும் கதையிது. பெண்ணுக்குமேகூட அவளுடல் மூலதனமாகி இருப்பதுவும் அதில் பழுதுபாடுகளைக் காணும் சூழலில் அவள் அடையும் மனச்சரிவையும் இச்சிறுகதை பேசுகிறது. பெண் உடல் இச்சைக்கான கச்சாப்பொருள் அல்ல; அதேசமயம் அதற்கு எவ்வகையிலும் புனிதத்தன்மையும் பூசப்பட வேண்டிய அவசியமில்லை என்பதான சிந்தனைக்கு இச்சிறுகதை உங்களை நகர்த்திச் செல்கிறதா? இச்சிறுகதை குறித்து உங்கள் பார்வை என்ன?
சிறுகதையை முழுமையாக செவிமடுங்கள். உங்களுக்கு இச்சிறுகதை என்னவாக இருக்கிறது என்று கருத்துப்பதிவிடுங்கள்.
ஒலிப்பேழை – இது மலேசியத் தமிழ் இலக்கியத்தின் குரல்.
ஒலிப்பேழை வலையொளியை Subscribe செய்யுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள். நமது படைப்பையும் படைப்பாளர்களையும் கொண்டாடுவோம்.
-விஜயலட்சுமி