Home இந்தியா மலேசியாவுக்கு போர்விமானங்கள் விற்க முற்படும் இந்தியா

மலேசியாவுக்கு போர்விமானங்கள் விற்க முற்படும் இந்தியா

641
0
SHARE
Ad

புதுடெல்லி : மலேசியாவுக்கு 18 இலகுரக போர் விமானங்கள் ‘தேஜாஸ்’ விற்பனை செய்ய இந்தியா முன்வந்துள்ளது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, எகிப்து, அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இந்த  ஒற்றை இயந்திரம் கொண்ட ஜெட் விமானத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது.

1983 இல் முதன்முதலில் இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு – 2023 ஆம் ஆண்டு முதல் விநியோகத்திற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 83 தேஜாஸ் ஜெட் விமானங்களுக்கு இந்திய அரசாங்கம் கடந்த ஆண்டு 6 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியது.

#TamilSchoolmychoice

வெளிநாட்டு பாதுகாப்பு சாதனங்களை இந்தியா நம்பியிருப்பதை குறைக்க ஆர்வமாக உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மோடியின் அரசாங்கம், ஜெட் விமானங்களை ஏற்றுமதி செய்வதற்கான இராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தேஜாஸ் வடிவமைப்பு மற்றும் பிற சவால்களை முதலில் எதிர்நோக்கியது. ஒரு காலத்தில் இந்திய கடற்படையால் மிகவும் அதிக எடை கொண்டதாக இத்தகைய விமானங்கள் நிராகரிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு அக்டோபரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், 18 ஜெட் விமானங்களை அரச மலேசிய விமானப்படைக்கு விற்பனை செய்ய உடன்பாடு கண்டது.  இரண்டு இருக்கைகள் கொண்ட தேஜாஸ் விமானங்கள்தான் அவை.

பிரிட்டன், தனது சொந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியாவின் இலக்கை ஆதரிப்பதாக தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் தற்போது ரஷ்ய, பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு போர் விமானங்கள் சேவையில் உள்ளன.

இந்தியா தனது சோவியத் காலத்து ரஷ்ய போர் விமானங்களான மிக்-21ஐ 2025 ஆம் ஆண்டுக்குள் சேவையிலிருந்து நிறுத்திவிடத் திட்டமிட்டுள்ளது.