Home நாடு நூருல் இசா மறுமணம் புரிந்தார்

நூருல் இசா மறுமணம் புரிந்தார்

696
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 42 வயதான பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மகளுமான நூருல் இசா மறுமணம் புரிந்து கொண்டார்.

இந்தத் தகவலை அவர் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

சிலாங்கூர் மாநில அரசின் முன்னாள் அதிகாரியான 46 வயதான யின் ஷாவ் லூங் என்பவரைத்தான் அவர் திருமணம் செய்து கொண்டார்.

#TamilSchoolmychoice

அனைத்துலக, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மாநில மந்திரி பெசாராக இருந்தபோது நூருலின் புதிய கணவர் யின் ஷாவோ லூங் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் வியூகத் தகவல் தொடர்பு இயக்குநராக இருந்தார். தற்போது கசானா (Khazanah) ஆராய்ச்சிக் கழகத்தில்  ஆராய்ச்சியாளராக உள்ளார்.அவருக்கு முந்தைய திருமணத்தின் மூலம் ஒரு குழந்தை உள்ளது.

நூருல் இசா முன்பு தொழிலதிபர் ராஜா அஹ்மத் ஷாரிர் இஸ்கந்தர் ராஜா சலீம் என்பவரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவராவார். அந்தத் திருமணத்தின் மூலம் அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

“ஆகஸ்ட் 5, 2022 அன்று மாலை, நாங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைச் சாட்சியாக வைத்து திருமணம் செய்துகொண்டோம்” என்று நூருல் இசா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

நண்பர்களும் சக அரசியல்வாதிகளும் நூருல் இசாவின் முகநூல் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.