Home கலை உலகம் ராகாவில் ‘நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 3.0’ வானொலிப் போட்டி

ராகாவில் ‘நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 3.0’ வானொலிப் போட்டி

327
0
SHARE
Ad

‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 3.0’ வானொலிப் போட்டியில் பங்கேற்று ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்

‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 3.0’ போட்டியைப் பற்றிய சில விவரங்கள்:

• ராகா இரசிகர்கள் இப்போது முதல் செப்டம்பர் 29 வரை ‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 3.0’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று 1000  ரிங்கிட் வரை ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

• வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.

#TamilSchoolmychoice

• 1000 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வெல்ல பங்கேற்பாளர்கள் ஒலிபரப்பப்படும் 2-வினாடிப் பாடல் துணுக்கின் தலைப்பை 5 வினாடிகளுக்குள் சரியாக யூகிக்க வேண்டும்.

• பதில் தவறாக இருந்தால், பாடல் துணுக்கு 5 வினாடிகளுக்கு ஒலிபரப்பப்படும். 300 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வெல்லப் பங்கேற்பாளர்கள் 5 வினாடிகளுக்குள் பாடலின் தலைப்பைச் சரியாக யூகிக்க வேண்டும்.

• பதில் இன்னும் தவறாக இருந்தால், பாடல் துணுக்கு 10 வினாடிகளுக்கு ஒலிபரப்பப்படும். 100 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வெல்லப் பங்கேற்பாளர்கள் 5 வினாடிகளுக்குள் பாடலின் தலைப்பைச் சரியாக யூகிக்க வேண்டும்.

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

பின்தொடருக;