Home கலை உலகம் ஆஸ்ட்ரோவில் மீண்டும் மலரும் ‘ரசிக்க ருசிக்க’ – பிரபல உள்ளூர் தமிழ் பயணத் தொடரின் 7-வது...

ஆஸ்ட்ரோவில் மீண்டும் மலரும் ‘ரசிக்க ருசிக்க’ – பிரபல உள்ளூர் தமிழ் பயணத் தொடரின் 7-வது பருவம்!

213
0
SHARE
Ad

*ஆஸ்ட்ரோவில் மீண்டும் மலரும் ‘ரசிக்க ருசிக்க ரீலோடட்’ எனும் பிரபலமான உள்ளூர் தமிழ் பயணத் தொடரின் சீசன் 7-ஐ கண்டு மகிழுங்கள்

*பால கணபதி வில்லியம் முதல் முறையாக ஒரே நேரத்தில் தொகுப்பாளராகவும், அறிமுக இயக்குநராகவும் இடம்பெற்றுள்ளார்

‘ரசிக்க ருசிக்க ரீலோடட்’ எனும் தனது பிரபலமான உள்ளூர் தமிழ் பயணத் தொடரின் சீசன் 7, செப்டம்பர் 13, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பாகும் என்பதை அறிவிப்பதில் ஆஸ்ட்ரோ மகிழ்ச்சி அடைகிறது. இந்தச் சீசனில் பி.ஜி.டபிள்யூ என்று அன்புடன் அழைக்கப்படும் பால கணபதி வில்லியம் தொகுப்பாளராக இருப்பதோடு புதுமுக இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

2014-ஆம் ஆண்டில் முதல் சீசனின் பிரீமியரைத் தொடர்ந்து அதன் 10-வது ஆண்டின் நிறைவு விழாவை இவ்வாண்டுக் கொண்டாடும் ரசிக்க ருசிக்க ரீலோடட், அனைத்து வயதினரின் இதயங்களிலும் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இருந்து பல்வகையான உணவுகளை இந்நிகழ்ச்சி சித்திரிக்கும். சீசன் 7, பார்வையாளர்களுக்கான நுண்ணறிவுத் தகவல்களுடன் பொழுதுபோக்குக் கூறுகளுடன் பன்முகத்தன்மைக் கொண்ட நம் நாட்டில் உணவுக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான இணக்கமானப் பிணைப்பைத் தழுவுகிறது.

உணவை மதிப்பாய்வுச் செய்வதில் நன்கு அறியப்பட்ட பி.ஜி.டபிள்யூ, கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, பூச்சோங், செகிஞ்சான், சிரம்பான், நிலாய், ஈப்போ, தாப்பா, கோலா கங்சார் மற்றும் பல இடங்களுக்குப் பயணம் செய்வதோடு ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு முதன்மை உணவு வகைகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாயங்களில் விரைவு உணவு வகைகளையும் மதிப்பாய்வுச் செய்வார்.

#TamilSchoolmychoice

இயக்குநர் மற்றும் தொகுப்பாளர் பால கணபதி வில்லியம் கூறுகையில், “7-வது சீசனுக்காக ரசிக்க ருசிக்க ரீலோடட் தொகுப்பாளராக மீண்டும் பொறுப்பேற்பதில்  நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். ரசிக்க ருசிக்க நிகழ்ச்சியின் 10-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்தச் சீசனின் புதுமுக இயக்குநராக அறிமுகமாகும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதால், இச்சீசன் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. உணவு மதிப்பாய்வாளராகப் பல ஆண்டுகளாக நான் பெற்ற அனுபவம் ரசிகர்களுக்குச் சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தையும் மதிப்பையும் கொண்டு வர எனக்கு உதவியது என்று நம்புகிறேன். வாடிக்கையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் முக்கிய உணவுகள் மற்றும் உணவகங்களை இரசித்து, ஆராய்வார்கள் என்று நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை, ஆஸ்ட்ரோ வழங்கிய வாய்ப்பிற்காகவும், உள்ளூர் திறமைகள் மற்றும் உள்ளடக்கத் தயாரிப்பு நிறுவனங்களை வளர்ப்பதில் அவர்களின் பங்கிற்காகவும் நான் நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

ரசிக்க ருசிக்க ரீலோடட் நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.

30% தள்ளுபடி* மற்றும் இலவச நிறுவலுடன் மாதத்திற்கு ரிம41.99 கட்டணத்தில் புதிய ஆஸ்ட்ரோவிற்குப் பதிவுச் செய்யவும். #NewAstro பொழுதுபோக்குடன் வேடிக்கையான நேரத்தைச் சேர்ந்து அனுபவிக்கவும் – குடும்பத்திற்கு மிகவும் வேடிக்கையாகப் பொழுதுபோக்கு இப்போது உள்ளது.

மேல் விபரங்களுக்கு astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்

*விதிமுறைகள் & நிபந்தனைகளுக்கு உட்பட்டது