Home நாடு மக்கோத்தா இடைத் தேர்தல்: குளுவாங் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் வேட்பாளர்!

மக்கோத்தா இடைத் தேர்தல்: குளுவாங் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் வேட்பாளர்!

168
0
SHARE
Ad
மக்கோத்தா வேட்பாளர் சைட் ஹூசேன் சைட் அப்துல்லா

குளுவாங்: செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில், தேசிய முன்னணி – ஒற்றுமை அரசாங்க வேட்பாளராக குளுவாங் அம்னோ தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவர் சைட் ஹூசேன் சைட் அப்துல்லா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு வணிகரான அவர், மலேசியத் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் டிப்ளமா பட்டம் பெற்றவராவார். குளுவாங் நகரமன்ற உறுப்பினராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். சீன மொழியான மாண்டரினில் உரையாடும் திறனையும் அவர் பெற்றுள்ளார்.

சைட் ஹூசேனின் வேட்பாளர் அறிவிப்பை ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹாபிஸ் காசி, அம்னோ தேசியத் தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடி முன்னிலையில் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

மக்கோத்தா இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெறும்.

மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர் ஷாரிபா அசிசா (63) காலமானதைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. குளுவாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் மக்கோத்தா ஒன்றாகும்.