Home வணிகம்/தொழில் நுட்பம் வணிகர்களின் வாழ்வை விடிவெள்ளியாக்க 50 மில்லியன் மைக்ரோ கடனுதவி

வணிகர்களின் வாழ்வை விடிவெள்ளியாக்க 50 மில்லியன் மைக்ரோ கடனுதவி

1032
0
SHARE
Ad

kkகோலாலம்பூர்,ஜன.30- சிறு வணிகர்கள், அங்காடி கடை வைத்திருப்பவர்களுக்கு பேங்க் ராக்யாட் 50 மில்லியன் கடனுதவி ஒதுக்கியுள்ளதை மலேசிய வர்த்தக சம்மேளனங்களின் சங்கம் வரவேற்றுள்ளது.

சில வகையான கறுப்புப் பட்டியல் இடப்பட்ட வணிகர்களும் இந்த கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 1,000 வெள்ளி முதல் 50,000 வெள்ளி வரையிலான கடன் பெறும் வாய்ப்பினை இந்த மைக்ரோ கடனுதவி வழங்கி வருகிறது.

வணிகர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த கடனுதவி திட்டத்தால் பல வணிகர்கள் பயன் அடைவார்கள் என்றும், அதற்காக அரசாங்கத்திற்கு சம்மேளத்தின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாக அதன் தலைவர் டத்தோ கே.கே.ஈஸ்வரன் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும் சிட்டோஸ் – சிட்ரிஸ் என்று கறுப்புப்பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்களை அதில் இருந்து நீக்க வேண்டியும் மைக்கி அரசாங்கம் அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்கள் ஒரே மலேசியா கோட்பாட்டை அறிமுகப்படுத்தி அதன் வழி அனைவரும் ஒன்றே என்று கூறி வருவதோடு இந்தியர்களுக்காக பல அரிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.

குறிப்பாக வணிகர்களின் முன்னேற்றத்திற்து அவசியம் பங்கு அளப்பரியது என்றும், பிரதமர் அவர்களுக்கு மைக்கியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ கே.கே.ஈஸ்வரன் தெரிவித்தார்.