ஆஸ்ட்ரோவின் பிரத்தியேக நடனப் போட்டியான ‘ஆட்டத்தின்’ மாபெரும் வெற்றியாளராக ஹைப்பர்ஃப்ளெக்ஸ் டிசி வகைச் சூடியது. 50,000 ரிங்கிட் ரொக்கப் பரிசைத் தட்டிச் சென்றது
கோலாலம்பூர் – மூன்றாவதுச் சுற்றில் கடுமையானப் போட்டியைத் தொடர்ந்து கேஎல்எம்டி பாய்ஸை வீழ்த்தி ஆஸ்ட்ரோவின் பிரத்தியேக மற்றும் பிரபல நடனப் போட்டியான ஆட்டத்தின் மாபெரும் வெற்றியாளராக ஹைப்பர்ஃப்ளெக்ஸ் டிசி வாகை சூடியதோடு, 50,000 ரிங்கிட் ரொக்கப் பரிசைத் தட்டிச் சென்றது.
அதுமட்டுமல்லாமல், மில்லினியம் ஆர்ட்ஸ் மூன்றாவது பரிசைப் பெற்றது. நான்காவது பரிசை வென்ற வி-ஹாரா முறையே 25.46% வாக்குகளுடன் பொது மக்களின் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று ஆட்டத்தின் மிகவும் பிரபலமான விருதை வென்றது.
13 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலர்ந்த ஆட்டத்தின் மாபெரும் இறுதிச் சுற்று 18 ஜனவரி 2025, பேராக், ஈப்போ, இந்திரா முலியா அரங்கத்தில் இரவு 9 மணிக்கு நேரலையாக நடைபெற்றது. ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது.
ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டத்தை மறுதொடக்கம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மற்றும் முதன்முறையாக எங்களின் பிரத்தியேக நடனப் போட்டியைப் பேராக், ஈப்போ, இந்திரா முலியா அரங்கத்தில் நேரலையாக நடத்தினோம்.
மாபெரும் வெற்றியாளராக மகுடம் சூடிய ஹைப்பர்ஃப்ளெக்ஸ் டிசிக்கும் பல திருப்பங்களுக்கு மத்தியில் இறுதிச் சுற்றில் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைப் புரிந்த மற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
2000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அரங்கத்தில் நிகழ்ச்சியை நேரடியாகக் கண்டுக் களித்ததைத் தொடர்ந்து மலேசியக் குடும்பங்களும் ஆஸ்ட்ரோ மூலம் நிகழ்ச்சியை நேரலையாகக் கண்டு மகிழ்ந்த சரித்திர வெற்றியைப் படைத்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உள்ளூர் திறமைகளை வளர்க்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை இன்னும் நிறைய உருவாக்குவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
ஹைப்பர்ஃப்ளெக்ஸ் டிசியின், குழுத் தலைவர், ஹரி கிருஷ்ணன் கூறுகையில், “ஆட்டம் என்பது ஒரு போட்டி மட்டுமல்ல, இது நடனக் கலையின் மீதான உங்களின் அர்ப்பணிப்புத், தொலைநோக்கு மற்றும் அசைக்க முடியாதப் பொறுப்பின் பிரதிபலிப்பாகும்” என்றார்.
வெற்றியாளர்களின் பட்டியல் பின்வருமாறு:
மேலும், மியூசிக் கிச்சன், அரவிந்த், ஹஷ்மிதா, அருளினி, கிரிஷ் கே, மற்றும் ஜூபிர் கான் உள்ளிட்ட உள்ளூர் திறமையாளர்களின் திகைப்பூட்டும் படைப்புகளால் ரசிகர்கள் வியப்படைந்தனர். குறிப்பிடத்தக்கத் தொகுப்பாளர்களான டெனெஸ் குமார் மற்றும் விகடகவி மகேன் ஆகியோர் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இந்திய ராப்பர், அசல் கோலாரின் சிறப்புத் தோற்றமும் நா ரெடி மற்றும் பையா டேய் பாடல்களைப் பாடிய அவரின் படைப்பும் ரசிகர்களைக் கவர்ந்தது.
ஆட்டம் இறுதிச் சுற்றில் எம்.ஜே.நடா, அருணா, ராமேஸ்வரா, மணிமாறன் மற்றும் ரதிமலர் உட்பட ஐந்து நடுவர்கள் இடம்பெற்றனர். பி.ஜி.டபள்யூ, ரேவதி, கீதா மற்றும் உதயா ஆகியோர் விருந்தினர் தொகுப்பாளர்களாகக் கலந்துக் கொண்டனர்.
ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.
ஆட்டம் நிகழ்ச்சியின் மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.