Home வணிகம்/தொழில் நுட்பம் ஆசிய சந்தையில் சாம்சங் பங்குகளை வீழ்த்தி டொயோட்டா நிறுவனம் முதலிடம்

ஆசிய சந்தையில் சாம்சங் பங்குகளை வீழ்த்தி டொயோட்டா நிறுவனம் முதலிடம்

487
0
SHARE
Ad

toyotaடோக்கியோ, மே 17 –  கடந்த ஆண்டு ஜப்பானின் வாகன தயாரிப்புப் பங்குகள் இரண்டு மடங்காக உயர்ந்த பிறகு, அந்நாட்டின் டொயோட்டா நிறுவனம் ஆசிய சந்தையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த கொரிய நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிஸை விட மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது.

டொயோடாவின் நேற்றைய சந்தை முதலீடு மட்டும் 22.23 டிரில்லியன் யென் ($217 பில்லியன்) எனக் கூறப்படுகிறது.

இதனால் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட் போன் ( Galaxy smartphone), கையடக்கக் கணினி (tablet computer) ஆகியவற்றின் முதலீட்டான 20.32 டிரில்லியன் யென் மதிப்பை விட டொயோட்டா நிறுவனம் கூடுதல் மதிப்பைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

சாம்சங் நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆசிய சந்தையில் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.