Home உலகம் ஒபாமா ஜூன் மாதம் ஆப்பிரிக்கா பயணம்

ஒபாமா ஜூன் மாதம் ஆப்பிரிக்கா பயணம்

488
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், மே 21- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜூன் மாத இறுதியில் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இந்த தகவலை நேற்று வெளியிட்டது.

ஒபாமா அவரது மனைவி மிசெல்லுடன் மேற்கொள்ள இருக்கும் இந்த பயணத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள செனகல், டான்சானியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுகிடையே கூட்டுறவை மேம்படுததுவதும், அமைதியை நிலைநாட்டுவதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

#TamilSchoolmychoice

இந்த பயணத்தின் போது தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு ஏதிராக போராடிய 94 வயதான நெல்சன் மண்டேலாவை அதிபர் ஒபாமா சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.