Home நாடு மலாக்கா மாநில செயலாளராக நாயிம் பதவி ஏற்பு!

மலாக்கா மாநில செயலாளராக நாயிம் பதவி ஏற்பு!

751
0
SHARE
Ad

dscf2128மலாக்கா, மே 30 – மலாக்கா மாநில நிதித்துறை அதிகாரியாக இருந்த டத்தோ நாயிம் அபு  பக்கர், வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் அம்மாநில செயலாளராக பதவி ஏற்கிறார்.

இதற்கு முன்பு மலாக்கா மாநில செயலாளராக இருந்த டத்தோ ஓமார் காசே, பிரதமர் துறை இலாகாவின் கீழ் மலேசிய நிர்வாகம் நவீனமயமாக்கல் மற்றும் மனிதவளம் திட்டமிடுதல் என்ற துறையின் (Mampu) பொது நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளதால் அவருக்குப் பதிலாக நாயிம் நியமிக்கப்பட்டுள்ளதாக மலாக்கா முதலமைச்சர் டத்தோ இட்ரிஸ் ஹாரோன் தெரிவித்தார்.

இது குறித்து நாயிம் கூறுகையில், “என் மீது நம்பிக்கை கொண்டு இந்த புதிய பொறுப்பை வழங்கியிருக்கும் மலாக்கா முதல்வர் இட்ரிஸ் மற்றும் அம்மாநில அரசாங்கம் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி மலாக்கா மாநில நிதித்துறை அதிகாரியாக நாயிம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.