Home நாடு இந்திய வம்சாவளியினரின் அனைத்துலக கலை,கலாச்சார பண்பாட்டு விழா 2013

இந்திய வம்சாவளியினரின் அனைத்துலக கலை,கலாச்சார பண்பாட்டு விழா 2013

514
0
SHARE
Ad

IMAG0131பத்துமலை, ஜூன் 3 – 2013 ஆம் ஆண்டிற்கான இந்திய வம்சாவளியினரின் அனைத்துலக கலை மற்றும் கலாச்சார பண்பாட்டு விழா பத்துமலை கோயில் வளாகத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்திய வம்சாவளியினரின் அமைப்பான (GOPIO) சார்பாக கடந்த மே 31 ஆம் தேதி முதல் ஜுன் 2 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில், இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஆடல், பாடல், விளையாட்டு, கோலமிடுதல், தற்காப்புக் கலை, யோகா ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இவ்விழாவில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கலந்து கொண்டு இந்திய பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி, பல்லாங்குழி, தாயம் ஆகியவற்றை விளையாடி மகிழ்ந்தனர்.

#TamilSchoolmychoice

அதோடு, மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட சாகசக் கலைகளான தற்காப்புக் கலை, யோகா, சிலம்பம் ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

மலேசிய இந்திய முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் சங்கத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், இவ்விழாவில் கலந்து கொண்ட பல இந்திய இளைஞர்களுக்கு மலேசிய இராணுவத்தைப் பற்றியும், அதில் இணைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.IMAG0140

மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான இந்திய மக்கள் கலந்து கொண்டனர். அதோடு வெளிநாட்டைச் சேர்ந்த பல இந்திய மக்கள் இவ்விழாவிற்கு வருகை புரிந்திருந்தனர்.

விழாவின் நிறைவு நாளான நேற்று ம.இ.கா தேசியத் தலைவரும், மலேசிய இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோஸ்ரீ. ஜி. பழனிவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

இவ்விழாவில் பேசிய பழனிவேல் கூறியதாவது, “இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அனைத்து துறைகளிலும் மிகச் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஆற்றல் உடையவர்கள். ஆனால் நாம் எப்போதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம்.

அயல்நாட்டு சீனர்களின் பாரம்பரிய விழாக்களில் பொருளாதாரத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

IMAG0145எனவே நமது பொருளாதாரத்தை உயர்த்த பல நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் மலேசியாவில் தங்களது முதலீடுகளை செய்ய பல நல்ல திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

அது பற்றிய பேச்சுவார்த்தைகளை அவர்களுடன் நான் மேற்கொண்டுவருகிறேன்” என்று தெரிவித்தார்.