Home வாழ் நலம் இரு மொழிகள் பேசுவதால் மனக்கோளாறு குறைகிறது

இரு மொழிகள் பேசுவதால் மனக்கோளாறு குறைகிறது

917
0
SHARE
Ad

மனிதரின் வாழ்நாளில் தினமும் இருமொழிகளைப் பயன்படுத்தி வருவோருக்கு வயதாவதால் ஏற்படும் மனக்கோளாறுகள் மெதுப்படுகிறதென கனடா நாட்டில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

ஒற்றை மொழியை மட்டுமே கையாண்டவர்கள் மற்றும் இரண்டு மொழிகளில் எழுதி,பேசி வருபவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால ஆய்வில் இந்த உண்மை வெளிப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளின் போது மூளைக்கு செல்லும் ரத்ததின் அளவு அதிகமாகி அதனால் மூளை நல்ல நிலையில் நீண்ட காலம் செயல்படும் தன்மையை பெறுகிறது.

#TamilSchoolmychoice

மூளைக்குச் செல்லும் இரத்த அளவு அதிகப்படுவதும், அதனால் மூளை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதுமான இரு காரணங்கள் ஒருவருக்கு மனக்கோளாறு ஏற்படுவதைத் தாமதமாக்குகிறது என்று கூறுகிறார் டொராண்டோ யோர்க் பல்கலைக் கழகப் பேராசிரியர் எலன் பிளெய்ஸ்டோக்.

இரு மொழிகளை அடிக்கடி மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் போது மொழிகள் பயனீட்டுத் துணையாக இருக்கும் மூளைப் பகுதிகளுக்கு போதுமான பயிற்சிகள் கிடைக்கின்றன.

இவ்வாறு மொழிகள் பயனீட்டின் போது சம்பந்தப்பட்ட மூளை தசைகள் தொடர்ந்து இடைவிடாது செயல்படுவதன் விளைவாக ஒருவரின் உடல் முதுமையடையும் போதும் மூளை முனைப்பாக செயல்பட்டு மனக்கோளாறு ஏற்படுவது தாமதப்படுகிறது.

பேராசிரியர் எலன் குழுவினர் யோர்க் பல்கலைக்கழகத்தில் 2002 ஆம் ஆண்டுக்கும் 2005 ஆண்டுக்குமிடைப்பட்ட காலப்பகுதியில் வயதான 184 பேர்களிடம் மீது மேற்கொண்ட ஆராய்ச்சியில் 91 பேர் ஒரு மொழியை மட்டும் கையாள்பவர்களாகவும் எஞ்சிய 93 பேர் இரு மொழிகளை அன்றாடம் பயன்படுத்துவோராகாவும் இருக்கக் கண்டு பிடித்தனர்.

ஒரு மொழியைப் பயன்படுத்துவோருக்கு மனநோய் தோன்றும் வயது 71.4 ஆண்டுகள் எனவும்,இரு மொழிகளைக் கையாள்பவர்களுக்கு மனநோய் தோன்றும் வயது 75.5 வருடங்கள் எனவும் ஆய்வின் முடிவில் தெரிய வந்திருப்பதாக பேராசியர் எலன் தெரிவித்தார்.

ஆய்விற்குட்படுத்தப்பட்ட எல்லா மனிதர்களின் கலாசார வேறுபாடுகள்,இன வேறுபாடுகள்,அவர்கள் கொண்டிருக்கும் முறையான தகுதிகள்,வேலை வேறுபாடுகள் மற்றும் ஆண் பெண் பால் வேறுபாடுகள் அனைத்தும் ஆய்வில் கவனத்தில் கொள்ளப்பட்டன.

வயது ஏற ஏற மனிதர்களுக்கு மனநோய் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றாலும் ஒருவரின் இரு மொழிகள் பயன்பாடு தினமும் இருந்து நீண்ட காலத்திற்கு அது தொடரும் போது மனக்கோளாறுகள் ஏற்பாடும் காலத்தை தாமதப்படுத்த இயலும் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் உணர்த்துகின்றன.

இரு மொழிகள் பயன்பாடு ஒருவருக்கு மன நோய் ஏற்படுவதைத் தவிர்க்க வலுவான பாதுகாப்பு கேடயமாக விளங்குகிறது என்று அதே குழுவில் இடம் பெற்றிருந்த மனோவியல் நிபுணர் ஃபெர்க்ஸ் கிரேய்க் கருத்துரைக்கிறார்.