Home நாடு மலேசியாவிலிருந்து மியான்மர் தொழிலாளர்கள் நாடு திரும்ப விமான கட்டணத்தில் சலுகை!

மலேசியாவிலிருந்து மியான்மர் தொழிலாளர்கள் நாடு திரும்ப விமான கட்டணத்தில் சலுகை!

497
0
SHARE
Ad

imagesபெட்டாலிங் ஜெயா, ஜூன் 12 – பெருகி வரும் வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு, மியான்மர் தேசிய விமான நிறுவனம் மலேசியாவில் பணியாற்றி வரும் மியான்மர் குடிமக்கள் மீண்டும் நாடு திரும்பும் வகையில், தனது விமான சேவை கட்டணத்தை பாதியாகக் குறைத்துள்ளது.

இந்த சலுகை இன்று (ஜூன் 12) ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 12 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளதாக மியான்மர் அனைத்துலக விமான சேவை நிறுவனத்தின் வர்த்தக மேலாளர் ஆயே மிரா தார் தெரிவித்துள்ளதாக இந்தியாவின் ஹிண்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்த சலுகையை வழங்குமாறு மேலிடத்தில் இருந்து எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சலுகை வழங்க மலேசியாவில் பணியாற்றி வரும் மியான்மர் நாட்டவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தான் காரணமா என்பதை அந்த அதிகாரி கூற மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த மே மாதம் 30 ஆம் தேதியில் இருந்து ஜூன் 4 ஆம் தேதி வரை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 7 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டும் பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

மேலும் இது போன்ற மோதல்களைத் தவிர்க்க கோலாலம்பூர் காவல்துறை, கடந்த வாரம் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 1000 தொழிலாளர்களை தனது கண்காணிப்பில் வைத்துள்ளது. தற்போது மியான்மரில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாம் மதத்தினருக்குமிடையே நடந்து வரும் மோதலுக்கும், மலேசியாவில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர மலேசியாவில் பணியாற்றி வரும் அந்த 1000 மியான்மர் நாட்டினருக்கு  ‘அய்வாயாவாடி’ அறக்கட்டளை இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும்,கான்பாவ்ஸா வங்கி மலேசியாவில் மரணமடைந்த அந்நாட்டைச் சேர்ந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கு உதவ முன்வந்திருப்பதாகவும் தி ஹிண்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.