Home இந்தியா பா.ஜ.க. துரோகம் செய்து விட்டது: நிதீஷ்குமார் பேட்டி

பா.ஜ.க. துரோகம் செய்து விட்டது: நிதீஷ்குமார் பேட்டி

451
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூன்17- பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் இன்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

Nitish-Kumarபாரதீய ஜனதா கட்சி எங்களுக்கு (ஐக்கிய ஜனதா தளம்) துரோகம் செய்து விட்டது. பீகார் மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது. எனவேதான் வேறு வழியின்றி பா.ஜ.க.விடம் இருந்து நாங்கள் தனியாக பிரிந்துள்ளோம்.

பா.ஜ.க.வில் வாஜ்பாய் – அத்வானி சகாப்தம் முடிந்து விட்டது. பா.ஜ.க.வில் தற்போது அத்வானி போன்ற மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை. அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

#TamilSchoolmychoice

பா.ஜ.க.வில் இப்போது புதிய சகாப்தம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் எங்களால் கூட்டணி வைக்க இயலாது. எனவே பா.ஜ.க.விடம் இருந்து பிரிந்துள்ளோம். பா.ஜ.க.வைச் சேர்ந்த துணை முதல்-மந்திரி சுசீல் குமார் மோடிக்கும் எங்களுக்கும் நல்ல நட்பு உள்ளது. நாங்கள் ஒருங்கிணைந்து பல நலத்திட்டப் பணிகளை செய்துள்ளோம். அவை நினைவு கூறப்பட வேண்டும்.

பா.ஜ.க. தலைவர்கள் மீது நாங்கள் எந்த குற்றச்சாட்டுக்களையும் சொல்ல வில்லை. சில வெளிசக்திகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட தொடங்கிய பிறகுதான் பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டது. பிரிவினை சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது. பா.ஜ.க.விடம் இருந்து நாங்கள் அவசரப்பட்டு, உடனடியாக விலகிவிடவில்லை. நீண்ட நாட்களாக பல கட்டங்களில் ஆலோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். குஜராத்தில் பா.ஜ.க. துணை இல்லாமல் ஐக்கிய ஜனதாதளம் தன் சொந்த காலில் நிற்கும்.

பா.ஜ.க. – ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி நீடிக்க வேண்டும் என்று அத்வானி மட்டுமே விரும்பினார். மற்ற தலைவர்கள் கூட்டணி கட்சிக்கு உரிய மரியாதையும் மதிப்பையும் கொடுக்கவில்லை. என்றாலும் கூட நீண்ட ஆலோசனைக்குப் பிறகு நாங்கள் சரியான நேரத்தில் விலகல் முடிவை எடுத்துள்ளோம்.

இது பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி. 17 ஆண்டுகள் தோழமையுடன் இருந்த ஒரு கட்சி விலகி செல்வதற்கான நிர்ப்பந்தமான சூழ்நிலையை பாரதீய ஜனதாதான் ஏற்படுத்தி விட்டது. இவ்வாறு நிதீஷ்குமார் கூறினார்.