Home வணிகம்/தொழில் நுட்பம் உலகின் மிக ‘மெல்லிய கைபேசி’ -அசென்ட் பி6: சீனா அறிமுகம்

உலகின் மிக ‘மெல்லிய கைபேசி’ -அசென்ட் பி6: சீனா அறிமுகம்

501
0
SHARE
Ad

லண்டன், ஜூன் 19- சீனாவின் மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ஹூவாவே’, 6.18 மி.மீட்டர் எடை கொண்ட உலகின் மிக மெல்லிய அசென்ட் பி6 கைபேசியை இன்று அறிமுகப்படுத்தியது.

Huawei-Ascend-P66.18 மி.மீட்டர் எடை கொண்ட இந்த கைபேசியை ஜூன் 18 அதாவது 6/18 அன்று அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டது. அதன்படி, ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் கோலோச்சும் ஸ்மார்ட்  போன் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் விதமாக அசென்ட் பி6 கைபேசியை லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Huawei_423604c120 கிராம் எடை மட்டுமே உள்ள இந்த கைபேசியின் விலை 600 அமெரிக்க டாலர்களாகும்.

#TamilSchoolmychoice

அடுத்த (ஜூலை) மாத இறுதிக்குள் சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 19 நாடுகளில் இந்த கைபேசி கிடைக்கும்.

அதனைத் தொடர்ந்து மேலும் 100 நாடுகளில் விற்கனை விரிவுப்படுத்தப்படும் என ஹூவாவே நுகர்பொருள் தயாரிப்பு நிறுவன செயல் அதிகாரி ரிச்சர்ட் யூ அறிமுக விழாவில் கூறினார்.

huawei-ascend-p6-photos-7_620x4134.7 அங்குல ‘டச் ஸ்கிரீன்’ பின்புறம் 8 எம்.பி. கேமரா, முன்புறத்தில் 5 எம்.பி. கேமரா மற்றும் சாம்சங் கேலக்சி எஸ்4, ஆப்பில் ஐ போன் 5 – 6க்கு இணையான அனைத்து சிறப்பம்சங்களும் தங்களின் தயாரிப்பான அசென்ட் பி6-ல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.