Home அரசியல் பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் 2,000 ஏக்கர் நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பு – தேசிய நில நிதி...

பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் 2,000 ஏக்கர் நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பு – தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்துடன் பேச்சு வார்த்தை

1032
0
SHARE
Ad

indexஈப்போ,பிப்.5- பேரா மாநிலத்தில் இயங்கி வரும் 134 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு மாநில அரசாங்கம் 2,000 ஏக்கர் நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பு குறித்து தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ சீ  ஸம்ரி தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட  2,000 ஏக்கர் நிலத்தை சரிவர நிர்வகிக்க எந்த அமைப்புகள் அடையாளம் காணப்படாததால்  கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவித மேம்பாடும் இல்லாமல் இருந்ததோடு, அரசியல் சர்ச்சையையும் கிளம்பியது.

தோட்டங்களை சீரமைப்பு செய்து நிர்வகித்து வருவதில் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம்  சிறந்த அனுபவம் வாய்ந்தது என்பதால் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக டத்தோசீ  ஸம்ரி கூறினார்.

#TamilSchoolmychoice

பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தால் 2,000 ஏக்கர் நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்திடம் வழங்கப்படும் என்றார்.