Home அரசியல் சபாவில் 100,000 வாக்காளர்கள் ‘முரண்பாடான இன வம்சாவளியை’ சார்ந்தவர்கள்

சபாவில் 100,000 வாக்காளர்கள் ‘முரண்பாடான இன வம்சாவளியை’ சார்ந்தவர்கள்

646
0
SHARE
Ad

சபா,பிப்.5- GE-SPR-Ballot-boxசபாவில் உள்ள வாக்காளர்களில் 12 விழுக்காட்டினர் ‘முரண்பாடான (‘irregular’) இன வம்சாவளியை’ சேர்ந்தவர்கள் என்பது மெராப் எனப்படும் மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வுத் திட்டம் மேற்கொண்ட ஒர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமல்ல, அந்த வாக்காளர்களில் கால் பகுதியினர் வைத்துள்ள அடையாளக் கார்டுகள்  சபாவில் 1999ம் ஆண்டு நிகழ்ந்த லிக்காஸ் தேர்தல் மனு மீது பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விசாரணையில் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தன.

அவர்கள் அந்தத் தொகுதியில் வைக்கப்பட்ட ‘ஆவி’ வாக்காளர்களாக இருக்கக் கூடும் என நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும் அவர்களுடைய பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் உள்ளன.

#TamilSchoolmychoice

மெராப் அமைப்பின் இணையத் தளத்தில் அந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2012ம் ஆண்டு முதல் கால்  பகுதியில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் கீழ் சபாவிலுள்ள 920,160 வாக்காளர்களில் 108,970 பேர் அதாவது 11.7 விழுக்காட்டினர் பூகிஸ், புருணை, ஜாவா, பிலிப்பினோ போன்ற “முரண்பாடான இன வம்சாவளியை” கொண்டுள்ளனர்.

சபா குடியேறிகள் மீது தற்போது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் நடத்தும் விசாரணைக்கு உண்மை நிலவரங்களைத் தெரிவிக்கும் வகையில் அதன் புள்ளி விவரங்கள் அமைந்துள்ளன. மெராப் அந்த குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த வாக்காளர்கள் பற்றிய ஆய்வை நடத்தியது.

அந்த வாக்காளர்கள் பெரும்பாலும் 2012ம் ஆண்டு முதல் கால் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் சிலாம், கிமானிஸ், கலாபாக்கான், லிபாரான், பாப்பார், தாவாவ், சிபித்தாங், பியூபோர்ட், புத்தாத்தான் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் காணப்படுகின்றனர். அவர்கள் மொத்தம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 15 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள்.

‘சபாவில் பிறந்தவர்கள்’

அந்த வாக்காளர்கள் “முரண்பாடான இன வம்சாவளியை” கொண்டிருந்த போதிலும் அவர்களுடைய அடையாளக் கார்டுகளில் அவர்கள் மலேசியாவில் பிறந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது என மெராப் கூறியது.

சபாவுக்கான தேசியப் பதிவுக் குறியீடுகளைக் கொண்டு மேலும் சோதனை செய்த போது ஏறத்தாழ 7,000 பிலிப்பினோக்கள், 5,000 இந்தோனிசியர்கள், 2,000 பாகிஸ்தானியர்கள் சபாவில் பிறந்ததாக அந்தப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“சபாவில் பிறந்த ஐந்து வங்காள தேசிகளும் ஒரு புருண்டி நாட்டவரும் கூட உள்ளனர்.”

மெராப் வாக்காளர் பட்டியலை H0288001 முதல் H0384000 வரையும் H0480001 முதல் H0576000 வரையும்  உள்ள எண்களைக் கொண்ட அடையாளக் கார்டுகளுடன் சோதனை செய்த (லிக்காஸ் தேர்தல் மனுவில் முக்கியமான ஆதாரமாக இருந்தது) போது  “முரண்பாடான இன வம்சாவளியை” கொண்டிருந்த 108,333 வாக்காளர்களில் அந்த அடையாளக்கார்டுகளை வைத்திருந்தவர்கள் 26.2 விழுக்காட்டினர் அல்லது 28,332 என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

பிபிஎஸ் என்ற  Parti Bersatu Sabahவின் டாக்டர் சொங் எங் லியோங் சமர்பித்த தேர்தல் மனுவை விசாரித்த நீதிபதி முகமட் கமீல் அவாங், அந்த லிக்காஸ் சட்டமன்ற இடத்தைக் காலி செய்யுமாறு சபா முன்னேற்றக் கட்சியின் (SAPP) யோங் தெக் லீ-க்கு ஆணையிட்டார்.

1999 சபா தேர்தலில் சட்ட விரோதமாக அடையாளக் கார்டுகளைப் பெற்ற ‘ஆவி வாக்காளர்கள்’ உதவியுடன் யோங் லிக்காஸ் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதாகவும் நீதிபதி முகமட் தமது தீர்ப்பில் கூறினார்.