ஜூன் 26- மின்னனு சாதன உற்பத்தியில் முதலிடம் வகித்து வரும் சோனி நிறுவனம், கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு, அதிநவீன ஸ்மார்ட் கடிகாரம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
சோனி ஸ்மார்ட் கடிகாரம் 2 (Sony Smartwatch 2) என அழைக்கப்படும் இந்த வகை கடிகாரங்கள், 1.6 அங்குல அளவு மற்றும் 220 x 176 பிக்சல் (Pixel) உடைய தொடுதிரையினை உள்ளடக்கியதுடன், அலுமினியத்தினால் ஆன வெளி உடலமைப்பையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் திறக்கற்றை 4.0 (Bluetooth 4.0) தொழில்நுட்பம் உள்ளடங்கலாக யுஎஸ்பி (USB) மூலம் மின்சார சக்தியை சேகரிக்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கடிகாரத்தின் அமைப்பை காண கீழ் காணும் காணோளியை அழுத்தவும்!
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DoUzM7WYlP0