Home வணிகம்/தொழில் நுட்பம் அதிநவீன அண்ரோயிட் கையடக்க கணினி அறிமுகம்

அதிநவீன அண்ரோயிட் கையடக்க கணினி அறிமுகம்

626
0
SHARE
Ad

tabletகோலாலம்பூர், எப்ரல் 23- அதிநவீன கையடக்க கணினி  ஒன்றினை இலத்திரனியல் சாதனகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான  பிபோ (Pipo) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது கூகுளின் அண்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பிபோ எம்8 ப்ரோ (Pipo M8pro) எனும் இந்த கையடக்க கணினி  ஆனது 9.4 அங்குல அளவுடையதும், 1280 x 800 பிக்சல் ரிசோலுஷன் (Pixel Resolution) உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் க்வாட் கோர் செயலி (Quad Core Processor) மற்றும் பிரதான நினைவகமாக  2 ஜிபி ரேம் (2GB RAM) ஆகியவற்றினையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும் அண்ரோயிட் 4.1 ஜெல்லி பீன் (Android 4.1 Jelly Bean)  இயங்குதளத்தினையும்,16 ஜிபி (16GB) சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளதுடன் குறித்த சேமிப்பு வசதியினை மைக்ரோ எஸ்டி (MicroSD) அட்டைகளின் உதவியுடன் தேவைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான காமெரா மற்றும் 2 மெகாபிக்சல்கள் உடைய  காணொலி அழைப்புக்களுக்கான காமெரா போன்றவற்றினையும் கொண்டுள்ள இச்சாதனத்தின் விலை 229 அமெரிக்க டொலர்களாகும்.