சென்னை, ஜூலை 2- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆனால் வேறு வழியின்றி சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இந்தியர்களை அங்கிருந்து இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பிடும் வேலையில் இந்தியத் துதரகம் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இந்தியர்களுக்கு ஏற்கனவே இந்தியத் தூதரகம் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு திரும்பி வரும் தமிழர்களை வரவேற்று, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை அளித்திடும் வகையில் உடனடியாகத் தேவையான நிதி உதவி, கடன் உதவி உள்ளிட்ட உதவிகளைச் செய்து அவர்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டுமென்றும், அவர்களுக்குத் தமிழகத்திலேயே நிரந்தரப் பணி வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.