Home 13வது பொதுத் தேர்தல் பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் வழக்கறிஞர் ஆவதில் தவறு இல்லை – தலைமை நீதிபதி கருத்து

பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் வழக்கறிஞர் ஆவதில் தவறு இல்லை – தலைமை நீதிபதி கருத்து

709
0
SHARE
Ad

image

கோலாலம்பூர், ஜூலை 3 – தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழக்கறிஞர்களாகப் பணியாற்றலாம் என்று தலைமை நீதிபதி அரிபின் ஸகாரியா கூறியுள்ளார்.

பேராக் மாநிலத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக எதிர்கட்சியினர் தாக்கல் செய்துள்ள தேர்தல் மனுக்கள் சார்பாக, முன்னாள் கூட்டரசு நீதிபதி கோபால் ஸ்ரீராம் வாதாடவிருப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்துரைத்த அவர், “என்னைப் பொறுத்தவரை நீதிபதிகள் தங்கள் ஓய்வு காலத்தில், தங்கள் விருப்பம் போல் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் உரிமையைப் பறிக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அண்மையில், வழக்கறிஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டோபர் லியோங், பணி ஓய்வுபெற்ற நீதிபதிகள் மீண்டும் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவது ஒரு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தும். எனவே அதைத் தடை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே,  நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள முஸ்லீம் மதம் மாற்று சட்டம் குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, “அது ஒரு கொள்கை சார்ந்த முடிவு. அது குறித்து என்னால் கருத்து கூற முடியாது” என்று அரிபின் ஸகாரியா தெரிவித்துள்ளார்.