Home கலை உலகம் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு மூளையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது

படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு மூளையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது

573
0
SHARE
Ad

ஜூலை 8- பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு சில மாதங்களுக்கு முன்னர் ‘பேங்க் பேங்க்’ படப்பிடிப்பின் போது தலையில் காயம் ஏற்பட்டது.

1178அதன் பின்னர் அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. இந்த காயத்தின் விளைவாக மண்டை ஓட்டிற்கும் மூளைக்கும் இடையே நரம்பில் ரத்தக் கசிவு ஏற்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

ரத்தக் கசிவை நிறுத்த உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, மும்பை கர் பகுதியில் உள்ள இந்துஜா  மருத்துவமனையில் நேற்று  பிற்பகல் 2 மணியளவில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு தலையில் அறுவை சிகிச்சை  நடத்தப்பட்டது.

நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.கே. மிஷ்ரா வெற்றிகரமாக நடத்திய இந்த அறுவை சிகிச்சை சுமார் 45 நிமிடம் நீடித்ததாகவும் ஹ்ரித்திக் ரோஷன் நலமாக இருப்பதாகவும் அவரது தந்தை ராகேஷ் ரோஷன் கூறினார்.