பிரபல நடிகை மஞ்சுளா விஜயகுமார் காலமானார்!

    800
    0
    SHARE
    Ad

    Tamil-Daily-News_19459170104

    சென்னை, ஜூலை 23 – நடிகை மஞ்சுளா விஜயகுமார் இன்று காலமானார். மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் நடிகர் விஜயகுமார் வசித்து வந்தார். இவரது மனைவி நடிகை மஞ்சுளா. கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள கழிவறையில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

    போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மஞ்சுளாவை சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டார். நுரையீரல் தொற்று நோயால் மஞ்சுளா பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    #TamilSchoolmychoice

    டாக்டர் சண்முகநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள். இதனையடுத்து இன்று மஞ்சுளா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

    எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் உட்பட 100 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் மஞ்சுளா நடித்துள்ளார். இவருக்கு ப்ரீத்தா விஜயகுமார், வனிதா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.