ஆலயத் தலைவர் திருப்பணி சேவாரத்னம், சங்கபூஷன் சித. ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் நூல் வெளியீட்டை செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் ப.தியாகராஜன் (படம்) ஏற்று நடத்தும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சிறப்பு வருகையாளர்களாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, சிலாங்கூர் மாநில போலிஸ் துணை ஆணையர் டத்தோ. ஆ தெய்வீகன், இயற்கை மருத்துவப் பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன், தொழிலதிபர் கிளாசிக் சுப்பையா உட்பட மேலும் சில பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள்.
சுற்றுவட்டார பெருமக்களும் எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரளாக வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.