ஆக. 6- இயக்குனர் சேரன் மகளை காதலித்து திடீரென என பிரபலமாகியுள்ளார் சந்துரு.
இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றுவதாகவும் நடனமாடுபவர் என்றும் எம்.பி.ஏ. பட்டதாரி என்றும் செய்திகள் வருகின்றன.
சந்துருவின் அப்பா சினிமாவில் சில காலம் வேலை பார்த்துள்ளார். இவரது அம்மா ஈஸ்வரி ஆந்திராவை சேர்ந்தவர். இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது ஈஸ்வரி இருதய நோயாளியாக இருக்கிறார்.
ஆரம்பத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஆடல்–பாடல், கலைநிகழ்ச்சிகள் நடத்தும் நடனக்குழுவில் சந்துரு நடனம் ஆடி உள்ளார். பிறகு டி.வி.யில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஆடி பரிசு வாங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதை வைத்து நிறைய நிகழ்ச்சிகளில் நடனம் ஆட தொடங்கினார். இதனால் அவருக்கு பெண் ரசிகைகள் சேர்ந்தனர்.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் ஆடிய போது தான் சேரன் மகள் தாமினியின் அறிமுகம் கிடைத்தது. பிறகு காதல் மலர்ந்தது. சேரனுக்கு காதல் விவரம் தெரிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.
ஆனால் சந்துருவின் நடவடிக்கைகள் பற்றி விசாரித்தபோது பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்ததாகவும், எனவே அவருக்கு மகளை கட்டி கொடுக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார்.
தனது மூத்த மகளுக்கும் பேஸ்புக்கில் ‘ஐலவ்யூ’ சொல்லியுள்ளான் என்றும் ஆத்திரப்பட்டு உள்ளார். இது குறித்து போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்துரு சிகரெட் பிடிப்பது போன்றும், சேரன் மகளுடன் இருப்பதுபோன்றும் படங்கள் இணையத்தளத்தில் பரவியுள்ளன.