Home அரசியல் சங்கப்பதிவிலாகாவிடம் விளக்கம் கேட்டு இறுதி முயற்சி – ஜசெக முடிவு

சங்கப்பதிவிலாகாவிடம் விளக்கம் கேட்டு இறுதி முயற்சி – ஜசெக முடிவு

504
0
SHARE
Ad

Lim Guan Engகோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – ஜசெக வின் மத்திய செயற் குழுவிற்கு மறு தேர்தல் நடத்த வேண்டுமானால் சங்கப்பதிலாகா அதற்கான தகுந்த காரணங்களையும், சட்ட விதிமுறைகளையும் கூற வேண்டும் என்று ஜசெக கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.

இந்த காரணங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு சங்கப்பதிவிலாகா தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மானை சந்திக்கும் ஒரு இறுதி முயற்சியை ஜசெக மேற்கொள்ளும் என்றும் லிம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் சங்கப்பதிவிலாகா தேவையான விளங்கங்களை அளிக்கும் பட்சத்தில், மத்திய செயற்குழுவிற்கு மறு தேர்தல் நடத்த கட்சி தயாராக இருப்பதாக நேற்று இரவு நடைபெற்ற கட்சியின் அவசரக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் லிம் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஜசெக தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் அந்தோணி லோக் சங்கப்பதிவிலாகாவுடனான இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் லிம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.