Home கலை உலகம் மகள் மனம் மாறியதால் சேரன் மீதான வழக்கு ரத்தாகிறது

மகள் மனம் மாறியதால் சேரன் மீதான வழக்கு ரத்தாகிறது

456
0
SHARE
Ad

திரைப்பட   இயக்குனர் சேரனின் மகள் தாமினி. சூளை மேட்டை சேர்ந்த நடனமாடுபவரான சந்துருவை காதலித்த விவகாரம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

cheranissue21813_mஇது தொடர்பாக தாமினியும், சேரனும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர்.

தாமினி அளித்த புகாரில் சேரன் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். காதலன் சந்துருவை கொலை செய்வதற்கு சேரன் முயற்சி செய்வதாக தாமினி அளித்த புகாரின் அடிப்படையில் சேரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்த புகாரை கொடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்துரு மீதும் தாமினி புகார் கொடுத்திருந்தார்.

அதில் சந்துருவின் நடவடிக்கை பற்றியும் அவர் தனக்கு தொந்தரவு செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் சந்துரு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. காதல் பிரச்சினை காரணமாக 2 வாரங்களுக்கு மேல் குடும்பத்தினரை பிரிந்து தலைமை ஆசிரியர் வீட்டில் இருந்த தாமினி நேற்று முன்தினம் சேரனுடன் செல்வதாக நீதிமன்றத்தில் கூறினார். தாமினி மனம் மாறி சென்றதன் மூலம் சேரன் மீதான வழக்கு ரத்தாகிறது.

இந்நிலையில் காதலன் சந்துரு மீதான புகார் போலீசில் உள்ளதால் முன் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றத்தில்  இன்று விசாரணை நடக்கிறது. அப்போது சந்துருக்கு முன் ஜாமீன் கிடைக்குமா? என்று தெரியவரும். அதே நேரத்தில் சந்துரு மீது கொடுத்த புகாரை தாமினி  திரும்ப பெறுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.