Home வாழ் நலம் சிக்கனமும் சேமிப்பும்

சிக்கனமும் சேமிப்பும்

2663
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆக. 24- நம் வாழ்வில் அவசியம் கடைப்பிடைக்க வேண்டியது இந்த சிக்கனமும், சேமிப்பும் தான்!

சிக்கனமாக இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இன்றே உழைத்த பணத்தை இன்றே செலவழித்தால் அதில் என்ன பயன்? சிக்கனம் என்பது வீட்டைக் காக்கும். ஆனால், சேமிப்பு நாட்டைக் காக்கும் .

சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதற்காக உணவு உண்ணாமல், நல்ல உடைகளை உடுக்காமல் இருப்பது என்று பொருள் அல்ல.

#TamilSchoolmychoice

நமது தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமித்து வைப்பதில் பயன் ஏதும் இல்லை. இப்படி இருப்பது கஞ்சத்தனம். அப்படி இருக்க கூடாது.

அதாவது அவசியமான, அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் செலவழித்து விட்டு மீதியை சேமித்து வைத்தல் என்பதே சிக்கனம். பணத்தை வீண்விரயம் செய்யாமல் அவசியமானவற்றுக்கு மட்டும் செலவழிக்க வேண்டும் .

savingsகஞ்சத்தனமாக இருப்போரும் உண்டு

தம்மிடம் எல்லா வசதி இருந்தும் மற்றவர்களை எதிர்பார்ப்பார்கள்.

போதிய வசதி இருந்தும் தமது உறவுகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள்.

தமது உறவுகள் உடல்நிலை சரியில்லாது கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் போது பண உதவியோ, மனிதாபிமான உதவியோ செய்ய மாட்டார்கள். இப்படியானவர்களிடம் பணம் இருந்தும் என்ன பயன்?

கஷ்டத்தில் உடுக்க உணவில்லாமல், சாப்பிட வழியில்லாமல் இருக்கும் போது பண வசதி படைத்தவர்கள் தமது ஆடம்பர செலவுகளை செய்து தமது பணத்திமிரை காட்டுகிறார்கள்.

சடங்குகள், விழாக்கள் போன்றவற்றில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வீண் விரயம் ஆக்கப்படுகிறது, அளவுக்கு அதிகமான ஆடம்பரங்கள் என்று பணத்தை தண்ணீர் போல் வாரி இறைக்கிறார்கள்.

கொஞ்ச நேரம் யோசித்து இவற்றை எல்லாம் சிந்திக்கிறார்களா ?மற்றவர்களின் கஷ்டத்தையும் உணர வேண்டும் அவன் தான் மனிதன்.

மக்களிடம் சிக்கன பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் அதன்மூலம் சேமிப்பை பெருக்க வேண்டும். சிக்கனமும் சேமிப்பும் சோந்தால்தான் மூலதனம் பெருகும்.

சிறுவர்களுக்கு சின்ன வயதில் இருந்தே  சேமிப்பு பழக்கம் ஏற்பட்டால் தான் எதிர்கால வாழ்வை வளமுடனும், வளர்ச்சியுடனும் அமைத்துக்கொள்ள முடியும்.

kid-saving-money

சிறு துளி தான் பேரு வெள்ளம்

சிக்கனம், மற்றும் சேமிப்பு என்பது பணத்தை மட்டும் சேமிப்பது மட்டுமல்ல.

அதோடு நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் தண்ணீர், பெட்ரோல், மின்சாரம், காலநேரம், தானியங்கள், ஆகியவையும் அடங்கும்.

எனவே அனைத்து பொருட்களையும் சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும். வீண்விரயம் செய்வதை தவிர்க்க வேண்டும் .

சிக்கனம் என்பது மற்றவர்களின் பட்டினியைக் கூடப் போக்கும். “வாழு வாழவிடு’ என்பதுதான் சிக்கனத்தின் தாரக மந்திரம்.

தனி மனித வாழ்வில் மனிதனின் தரத்தை உயர்த்த சிக்கனமும், சேமிப்பும் மிக அவசியமானது . பெரியோர்களில் இருந்து சிறியோர்கள் வரை சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிக்க பழக வேண்டும் .

சிக்கன பழக்கமும், சேமிப்பும், இளம் வயதில் ஏற்பட்டால் எதிர்காலத்தில் பொருளாதார நிலையில் உயர முடியும். அதன் காரணமாக தங்களது வாழ்வு வளம்பெறுவது மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.

நாம் சேமிக்கும் ஒவ்வொரு வெள்ளியும் மருந்துகள் வாங்க குடிநீர் வசதி, பள்ளி வசதி, மருத்துவ வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உதவுகிறது.

உடனே ஏதாவது மருத்துவ தேவைக்கு, அல்லது பள்ளிகூடத்து தேவைக்கு என உடனே பணம் தேவைப்பட்டால் நாம் சேமித்த பணத்தில் இருந்து உடனே அந்த தேவையை பூர்த்தி செய்யலாம்.

நாம் உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்தல் ஆகாது. சிக்கனத்துடனும் சேமிப்புடனும் வாழ வேண்டும். நமது எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும் .

சிக்கனமும், சேமிப்பும் தான் வாழ்க்கையின் முதுகெலும்பு. எல்லோரும் சிக்கனத்துடனும் சேமிப்புடனும் இருந்தால் வாழ்வு வளம் பெறும், நாடு வளம் பெறும் .