இந்த சிறப்பு சலுகை விலையை இன்று ஆகஸ்ட் 30 காலை 12.01 மணி தொடங்கி, வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 8 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பயண காலம் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான, முஸாமில் முகமட் கூறுகையில், “மலேசியா ஏர்லயன்ஸின் சுதந்திர தின சிறப்பு சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மலேசியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் பயனிக்கலாம். இது ஒரு நல்ல வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.
இந்த 56 ரிங்கிட் சிறப்பு சலுகை ஒரு வழிப் பயணத்திற்கு மட்டும் என்பதோடு, எல்லா வரிகளுக்கும் உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.