Home நாடு ‘வல்லினம்’ கலை இலக்கிய விழா! செப்டம்பர் முழுக்க தொடர் இலக்கிய நிகழ்வுகள்!

‘வல்லினம்’ கலை இலக்கிய விழா! செப்டம்பர் முழுக்க தொடர் இலக்கிய நிகழ்வுகள்!

638
0
SHARE
Ad

vallinamvizha5adகோலாலம்பூர், செப்டம்பர் 2 –  ‘வல்லினம்’ குழுவினரால் ஒவ்வொரு ஆண்டும் ‘கலை இலக்கிய விழா’ வெற்றிகரமாக நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இவ்வருடமும் நூல் வெளியீடுகளோடு சேர்த்து செப்டம்பர் மாதம் முழுக்க தொடர் இலக்கிய நிகழ்வுகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்த வல்லினம் திட்டமிட்டுள்ளது.

கலை இலக்கிய விழா

வரும் 15.9.2013 (ஞாயிறு) மதியம் 2.00க்கு கலை இலக்கிய விழா பொது மக்களுக்காக திறந்துவிடப்படும். கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் (ம.இ.கா கட்டடம் எதிர்ப்புறம்) இந்நிகழ்வு சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும். இந்நிகழ்வில் ம.நவீனின் ‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’ என்ற நாவல் தொடர்பான விமர்சன நூல், கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவு’ என்ற தேர்த்தெடுக்கப்பட்ட சிறுகதை தொகுப்பும், பூங்குழலில் வீரனின் ‘நிகழ்த்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ என்ற கவிதை தொகுப்பும் வெளியிடப்படும்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்வில் வெளியிடப்போகும் 3 நூல்கள் தொடர்பாக ம.சண்முகசிவா, சுவாமி பிரமானந்தா, அ.பாண்டியன் மற்றும் கா.ஆறுமுகம் விமர்சனம் செய்வார்கள். இதே நிகழ்வில் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் அவர் வாசிப்பில் அவதானித்த மலேசிய இலக்கியங்கள் தொடர்பாக உரையாற்றுவார்.

இதையடுத்து ‘இலக்கியச் சந்திப்பு’ குழுவினரால் வெளியிடப்பட்ட ‘குவர்னிகா’ எனும் நூலும் வெளியீடு காணும். கருணாகரன் (இலங்கை), பானுமதி, ம.நவீன் (மலேசியா) போன்றவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு எழுத்தாளர் ஷோபா சக்தி தொகுத்த இந்நூலில் 12 நாடுகளிலிருந்து எழுதப்பட்ட 75க்கும் மேற்பட்ட படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. மலேசியாவிலிருந்து அ.பாண்டியனின் கட்டுரையும், கே.பாலமுருகன், மஹாத்மன், ம.நவீன் ஆகியோரின் சிறுகதைகளும், பூங்குழலி, யோகி, ம.நவீன் ஆகியோரின் கவிதைகளும் மற்றும் மா.சண்முகசிவாவின் நேர்காணல் ஒன்றும் மிக விரிவாக எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடல்கள்

கலை இலக்கிய விழாவைத் தொடர்ந்து தொடர் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. தமிழக கவிஞர் யவனிகா ஸ்ரீராம், எழுத்தாளர் ஷோபா சக்தி ஆகியோருடன் கலந்துரையாடல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு குறித்த மேல் விவரங்களை அறிந்து கொள்ள கீழ்காணும் இணைய வழித் தொடர்பை பயன்படுத்தவும் www.vallinam.com.my அல்லது வல்லினம் இதழின் ஆசிரியர் நவீன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு எண்: 0163194522