Home சமயம் பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் 6வது சுத்த சன்மார்க்க மாநாடு

பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் 6வது சுத்த சன்மார்க்க மாநாடு

655
0
SHARE
Ad

vallalarகோலாலம்பூர், செப். 4- எதிர்வரும் 5.10.2013 சனிக்கிழமை, 6.10.2013 ஞாயிற்றுகிழமை ஆகிய இரு நாட்கள் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் ‘வள்ளலார் அழைக்கிறார்’  எனும் 6வது சுத்த சன்மார்க்க மாநாடு சிறப்பாக நடைபெறவுள்ளது.

மலேசிய நாட்டு அறிஞர்களுடன்  தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை, மியன்மார், பிரான்ஸ்  ஆகிய நாடுகளைச் சேர்ந்த சான்றோர்களும் இந்நிகழ்வில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றவிருக்கிறார்கள். தமிழில் பட்டிமன்றமும் நடக்கவிருக்கிறது.

முதல் நாள் மாநாடு 5.10.2013 சனிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு  10 மணிவரையும் மறுநாள் 6.10.2013 ஞாயிற்றுகிழமை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடைப்பெறவுள்ளது.

#TamilSchoolmychoice

இருக்கைகளுக்கு முன்கூட்டியே  பதிவுச்செய்து கொள்ளுங்கள்!

டாக்டர் லலிதா வீரையா (012-3160470), என்சி ஆர் நாதன் (012-2182111), டாக்டர் தினகரன் (012-6391511) ஆகியோருடன் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.