Home நாடு புதிய தேசிய கல்வி செயல்திட்டத்தில் பல கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன – பக்காத்தான்

புதிய தேசிய கல்வி செயல்திட்டத்தில் பல கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன – பக்காத்தான்

424
0
SHARE
Ad

blueprintகோலாலம்பூர், செப் 9 – நாட்டின் புதிய தேசிய கல்வி செயல்திட்டம் 2013 – 2015 துணைப்பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் முகைதீன் யாசினால் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஆனால் அத்திட்டத்தில் அக்கறை கொண்ட பலர் தங்களது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் முன்வைத்தும் அதை கண்டு கொள்ளாமல் இயற்றப்பட்டிருப்பதாக பக்காத்தான் குறை கூறியுள்ளது.

மேலும், இந்த புதிய தேசிய கல்வி செயல் திட்டத்தால் கல்விமுறையில் பெரிய மாற்றங்களும், சீரமைப்புகளும் ஏற்படப்போவதில்லை என்று பக்காத்தானின் கல்வி பணிக்குழு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கேற்ப புதிய சமயப் பள்ளிகள், சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகள் கட்டப்படுவது குறித்த எந்த ஒரு தகவலும் அந்த புதிய திட்டத்தில் இல்லை என்றும் அக்குழு குறிப்பிட்டுள்ளது.