Home இந்தியா டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு! தூக்கு தண்டனை கிடைக்க பிரார்த்தனை!

டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு! தூக்கு தண்டனை கிடைக்க பிரார்த்தனை!

582
0
SHARE
Ad

Jyoti-Singh-Pandey-real-name-delhi-bus-rape-victim-Damini-original-image-safdarganj-hospitalபுதுடில்லி, செப் 10 – புதுடில்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட வழக்கில் டில்லி விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த 4 பேருக்கும் மரண தண்டனை கிடைக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இது போன்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கு இன்று வழங்கப்படும் தீர்ப்பே முன் உதாரணமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

டில்லி மருத்துவ மாணவியும் அவரது ஆண் நண்பரும் ஒரு பஸ்சில் ஏறினர். இந்த பஸ்சில் பெண் மட்டும் தனியாக இருந்ததை பயன்படுத்தி பஸ் டிரைவர் மற்றும் சக நண்பர்கள் மொத்தம் 6 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கொடூரமாக கற்பழித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். தொடர்ந்து தடுக்க வந்த மாணவனை தாக்கி பஸ்சில் இருந்து தள்ளி விட்டனர்.

இந்த சம்பவத்தில் உடம்பில் பல இடங்களில் கொடூரமான காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் சிங்கப்பூரில் அம்மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் அம்மாணவி சிகிச்சைப் பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் டிரைவர் ராமன்சிங், முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அட்சய்சிங் , இவர்களுடன் 16 வயது நிரம்பிய மைனர் ஒருவரும் அடங்குவர்.

இந்த 6 பேரில் ஒருவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். 16 வயது சிறுவன் மைனர் என்று கருதி சிறுவனுக்கு சட்டத்தின்படி அதிகப்பட்ச தண்டனை 3 ஆண்டு சிறை வழங்கப்பட்டது.

மீதமுள்ள 4 குற்றவாளிகள் முகேஷ்சிங், தினேஷ்சர்மா, அட்சய் தாக்கூர், பவன்குப்தா ஆகியோருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது.