Home அரசியல் இளைஞர்கள் தலையெடுக்கவில்லை என்றால் அம்னோ முதுமை காரணமாக இறந்துவிடும் – மகாதீர் கருத்து

இளைஞர்கள் தலையெடுக்கவில்லை என்றால் அம்னோ முதுமை காரணமாக இறந்துவிடும் – மகாதீர் கருத்து

355
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர், செப் 17 – எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் இளம் தலைவர்களைத் தேர்வு செய்தால் மட்டுமே, முதுமையால் இறப்பை நோக்கிப் போய் கொண்டிருக்கும் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

“அம்னோவை நிறுவியவர்கள் அன்றைய காலத்தில் பிரிட்டிஷ்காரர்களோடு போராடி, இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார்கள். அவர்கள் மலாய் இனத்தவர்களுக்காக நிறைய கனவு கண்டார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு வயதாகிவிட்டது. காலம் கடந்து விட்டது. அவர்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாகி விட்டது” என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

“அம்னோவின் மூத்த தலைவர்கள் தங்களது நிலையை உணர்ந்து இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் மக்களுக்கு தலைவர்கள் மீது ஒருவித சலிப்பு ஏற்பட்டுவிடும்” என்றும் மகாதீர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“கட்சியில் நிறைய பேர் லஞ்சத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். அதிகம் வேண்டாம். 200 ரிங்கிட் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நிறைய மலாய்காரர்களுக்கு அம்னோ நம்பகமான கட்சியாக இல்லை என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அதனால் தான் அவர்கள் அரசு சாரா இயக்கங்களைத் தேடுகிறார்கள். அவர்களுக்கு தேர்ந்தெடுப்பதற்கு நிறைய கட்சிகள் இருந்திருந்தால் 13 வது பொதுத்தேர்தலில் அம்னோ படு தோல்வியைச் சந்தித்திருக்கும்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

அம்னோ என்ன செய்தாலும், செய்யாவிட்டாலும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என்ற தவறான கண்ணோட்டத்தை கட்சி உறுப்பினர்களும், தலைவர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் மக்கள் அம்னோவைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.