பெய்ஜிங், செப்.23– சீனாவில் கம்யூனிஸ்டு தலைவர்களில் முக்கிய மானவராக திகழ்ந்தவர் போ ஸிலாய் (வயது 60), இவர் கம்யூனிஸ்டு கட்சியின் தென் மேற்கில் உள்ள சாங்குயிங் மெட்ரோபாலிட்டனின் தலைவராக இருந்தார்.
இருந்தும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. எனவே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் போன்றவற்றில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதைத்தொடர்ந்து இவர் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவர் மீது ஜினான் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து இன்னும் 10 நாளில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவும் அனுமதி அளித்தது.