Home அரசியல் சபா ஜசெக சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகினார்!

சபா ஜசெக சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகினார்!

438
0
SHARE
Ad

Hiew King Cheu2சபா, செப் 27 – ஜசெக நடந்த உட்கட்சிப் பூசல் காரணமாக சபா மாநில லூயாங் தொகுதி ஜசெக சட்டமன்ற உறுப்பினரான ஹியு கிங் சியு கட்சியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தார்.

தீடீர் கட்சி விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த ஹியு கிங் சியு, தனது ஆதரவாளர்களையும், நண்பர்களையும் கலந்து ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

இனி தான் ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக செயல்படுவேன் என்றும், தனது அதிகாரப்பூர்வ கடிதத்தை இன்று சமர்ப்பித்ததாகவும் ஹியு கிங் கூறினார்.

#TamilSchoolmychoice

சபா ஜசெக கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள், ஹியுவுக்கு எதிராக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் கடந்த மாதம் புகார் அளித்தனர் என்றும், அதன் காரணமாக தான் ஹியு கட்சியிலிருந்து விலகினார் என்று கூறப்படுகிறது.

மேலும், கட்சியின் ஒழுங்கு நடவடிக்க குழு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று காத்திருக்கலாமே? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹியு, “அதற்கு அவசியம் இல்லை” என்று கூறினார்.