கோலாலம்பூர், அக் 23 – இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் மட்டும் நாடெங்கிலும் 74 பேர் துப்பாக்கிச்சுட்டிற்கு ஆளாகி மரணமடைந்திருக்கிறார்கள் என்ற தகவலை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று வெளியிட்டார்.
கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெர்லிஸைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும், சிலாங்கூரில் மட்டும் மொத்தம் 15 கொலைகள் நடந்திருப்பதாகவும் சாஹிட் ஹமீடி அறிவித்தார்.
பேராக் மாநிலத்தில் 10 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், பினாங்கு மாநிலத்தில் 9 சம்பவங்களும் நடந்துள்ளதாகவும் சாஹிட் தெரிவித்தார்.
சபா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் 7 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், சரவாக், கிளந்தான், கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களில் 5 சம்பவங்களும் நடைபெற்றதாக சாஹிட் குறிப்பிட்டார்.
பெர்லிஸ் மாநிலத்தில் மட்டும் எந்த ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் நடைபெறவில்லை என்று சாஹிட் தெரிவித்தார்.
ஜசெகவின் பக்ரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெக் ஹுவா இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, சாஹிட் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
.