Home கலை உலகம் மம்தா – மனிஷாவுக்கு மீண்டும் உடல் நலம் பாதிப்பு!

மம்தா – மனிஷாவுக்கு மீண்டும் உடல் நலம் பாதிப்பு!

578
0
SHARE
Ad

hqdefault

சென்னை, அக் 29- மம்தா, மனிஷா கொய்ராலா இருவரும் மீண்டும் புற்றுநோய் , மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவப்பதிகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் மனிஷா கொய்ராலா. அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு 2 மாதங்களுக்கு முன் மும்பை திரும்பினார். தற்போது அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து அவர் தரப்பில் கூறும்போது,மஞ்சள் காமாலை நோயால் மனிஷா அவதிப்படுகிறார். நேபாளத்தில் பெற்றோருடன் தங்கி இருக்கும் அவர் வரும் நவம்பர் 3ம் தேதி மும்பை திரும்புகிறார். 20ம் தேதி அவர் சிகிச்சைக்காக மீண்டும் நியூயார்க் புறப்பட்டு செல்கிறார். இது பற்றி மனிஷா தனது இணைய தள பக்கத்தில் கூறும்போது, இது பிரச்னையான நேரம். மீண்டும் மாயை நாடகம் தொடங்கிவிட்டது. நாளை பிறக்கும்போது நமக்கு என்ன கொண்டு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.