Home அரசியல் எப்போது ஓய்வு பெறுவீர்கள்? இறந்த பின்பா? – கிட் சியாங்கிடம் மகாதீர் கேள்வி

எப்போது ஓய்வு பெறுவீர்கள்? இறந்த பின்பா? – கிட் சியாங்கிடம் மகாதீர் கேள்வி

693
0
SHARE
Ad

mahathir1கோலாலம்பூர், நவ 8 –  10 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட என்னைக் கண்டு ஜசெக கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்னும் பயப்படுபடுகிறாரா? என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தனது வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஸ் வெற்றியடைந்த செய்தி அறிவிக்கப்பட்டதுமே, இந்த இரு தலைவர்களும் தங்களது வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் வாதிடத் தொடங்கிவிட்டனர்.

சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் முடிவு முக்ரிஸை விட அவரது தந்தை மகாதீருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு என்று லிம் கிட் சியாங் கருத்துத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

மேலும், கடைசி நேரத்தில் மகாதீர் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் அவரால் தன் மகனுக்கு வெற்றியைத் தேடித் தர முடியவில்லை என்றும் லிம் கிட் சியாங் விமர்சித்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது லிம் கிட் சியாங்கிற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டுள்ள மகாதீர், “கிட் சியாங்கும் தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஆனால் எனது நிழலைக் கண்டு அவர் இன்னும் பயப்படுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“என்னைக் கீழே தள்ளுவது தான் கிட் சியாங்கின் ஒரே நோக்கம். எனது ஓய்விற்குப் பிறகும் நான் இன்னும் துடிப்புடன் செயல்படுவதால் கிட் சியாங்கிற்கு அது பிடிக்கவில்லை” என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்காக தான் பிரச்சாரங்களில் ஈடுபடும் திட்டம் எதுவும் போடவில்லை என்றும், ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தான் கடைசி நேரத்தில் அந்த முடிவை எடுத்ததாகவும் மகாதீர் தெரிவித்தார்.

“எப்போது கிட் சியாங் ஓய்வு பெறுவார்? இறந்த பின்பா? ஓய்வு பெற்றாலும் ஜசெக மூத்த தலைவராகவே தான் இருப்பாரா?” என்றும் மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.