Home தொழில் நுட்பம் வந்து விட்டது வீட்டைப் பாதுகாக்கும் புதிய செயலி!

வந்து விட்டது வீட்டைப் பாதுகாக்கும் புதிய செயலி!

510
0
SHARE
Ad

intellihome 300-200

நவம்பர் 12- ஆண்டிராய்டு மற்றும் ஐபோன் திறன்பேசிகளில் ‘வைப்பர் இணைப்பு’ என்ற புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த செயலி கார் மற்றும் வீட்டை கண்காணிக்க உதவுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் திருட்டு பிரச்சனைகளை கண்காணிக்கவே இச்செயலி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

2012 இல் அமெரிக்காவில், 2 மில்லியனுக்கும் அதிகமான திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 15 நொடிகளுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

#TamilSchoolmychoice

எனவே இது போன்ற திருட்டு சம்பவங்களை ஒழிக்கும் நோக்கில் இந்த புதிய செயலில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைப்பர் இணைப்பு செயலி வீட்டில் ஏதேனும் ஒரு அசைவு இருப்பினும் உடனே வீட்டு உரிமையாளருக்கு திறன்பேசிகளின் வாயிலாக ஒரு அறிவிப்பு அனுப்பும். கூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலம் வீட்டை சுற்றிலும் வைக்கப்படும் நிகழ் நேர கேமராக்களின் மூலம் வீட்டை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தொலைவில் இருந்து கூட பார்க்க முடியும்.

தொலைவில் இருந்தும் கூட உரிமையாளர்களால் இயக்கக் கூடிய இச்செயலி, சென்சார்கள், ஒலி எழுப்பும் சாதனம், எட்டு கேமராக்கள் என மொத்தம் 64 சாதனைகளை கொண்டுள்ளது.

இச்செயலியினால் வெளியூர்களுக்கு தொழில் ரீதியாகவும் அல்லது விடுமுறை காரணமாகவும் பயணம் செய்பவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் சொத்துக்கள் பாதுகாப்பாக இருப்பதை எண்ணி நிம்மதியாக இருக்கலாம்.