Home நாடு ஆம்பேங் அதிகாரி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்!

ஆம்பேங் அதிகாரி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்!

424
0
SHARE
Ad

ambankcourt1911பெட்டாலிங் ஜெயா, நவ 20 – ஆம்பேங் (Ambank) வங்கி அதிகாரியை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 36 வயது பாதுகாவலருக்கு இரு முறை மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லா ஓட் ஆர்டி ரசலியா என்ற அந்த நபர் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சுபாங் ஜெயாவில் உள்ள ஆம்பேங் வங்கியில், அதன் மேலாளர் நோராஸிடாவை (37 வயது) துப்பாக்கியால் சுட்டு, வங்கியின் பெட்டகத்திலிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றார்.

அவர் மாலை 6 மணியில் இருந்து 6.30 மணியளவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 302 பிரிவின் படிட், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம். அதோடு கையில் ஆயுதம் வைத்து திட்டமிட்டுப் படுகொலை செய்த குற்றத்திற்காக ஆயுதம் சட்டம் 1971 பிரிவு 3 ன் கீழும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

நீதிமன்றத்தில் இன்று லா ஓட்டுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த இரு வழக்குகளும் உடனடியாக ஷா ஆலம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

வங்கியில் இருந்து 450,000 ரிங்கிட் பணத்துடன் தப்பி ஓடிய லா ஓட், நாடு முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில், கடந்த நவம்பர் 9 ஆம் தேதி ஜோகூர் பாருவில் பிடிபட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.