Home உலகம் போப் பெனடிக்ட் வாழ்க்கைக் குறிப்பு

போப் பெனடிக்ட் வாழ்க்கைக் குறிப்பு

661
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_90795099736போப் ஆண்டவர் பதவியில் இருந்து ஒருவர் விலகுவது இதுவே முதல் முறை. 16ம் பெனடிக்ட் வரும் 28ம் தேதி பதவி விலகியவுடன், கார்டினல்கள் வாடிகனில் ஒன்று கூடி புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

போப் பெனடிக்ட்டின் வாழ்க்கைக் குறிப்பு

* 2005ம் ஆண்டு 78 வயதில்
265வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
* போப் 12ம் கிளமென்டுக்கு பிறகு இத்தனை வயதில்
போப்பாக தேர்வானவர் பெனடிக்ட். ஜெர்மனியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 9வது போப்.
* கார்டினலாக மிக நீண்ட காலம் பொறுப்பு வகித்தவர்.
* இயற் பெயர் ஜோசப் அலாய்சியஸ் ராட்சிங்கர். 1927ல்
ஜெர்மனி நாட்டில் பவாரியா பகுதியில் பிறந்தார்.
* பல்கலைக்கழகத்தில் மத சாஸ்திர போதனையாளராக பணியாற்றினார். போப் 6ம் பால் இவரை மூனிச் மற்றும்
ஃபிரீசிங் திருச்சபை தலைமை குருவாக நியமித்தார்.
* 1977 ஜூன் 27ம் தேதி கார்டினலாக நியமிக்கப்பட்டார்.
போப் 2ம் ஜான் பாலுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்.
* 1998ல் கார்டினல்களுக்கான கல்லூரியின் உதவி டீனாக பொறுப்பு வகித்தார். 2002 நவம்பர் 30ம் தேதி டீனாக தேர்வு செய்யப்பட்டார்.
* போப் 2ம் ஜான் பால் மறைந்தபோது இறுதி சடங்குகளுக்கும், பிரார்த்தனைக்கும் தலைமை வகித்தார்.
* தாய் மொழியான ஜெர்மன் தவிர பிரெஞ்ச், இத்தாலிய மொழிகளை சரளமாக பேச வல்லவர். லத்தின், ஆங்கிலம், ஸ்பானிஷ் தெரியும். போர்ச்சுக்கீசிய மொழியும் கொஞ்சம் தெரிந்தவர்.
* அறிவியல் கல்விக் கழகங்களில் உறுப்பினராக உள்ளார். பியானோ வாசிப்பதில் தேர்ச்சி மிகுந்தவர்.