கோலாலம்பூர், டிசம்பர் 12 – புரோட்டோன் நிறுவனத்தின் புதிய வெளியீடான பெர்டானா காரை நேற்று பிரதமர் அறிமுகப்படுத்தினார். இந்த புதிய ரக பெர்டானா நேற்று முதல் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வாகனமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
உருவடிவமைப்பில் ஹோண்டா ஏக்கோர்ட் போன்று இருக்கும் இக்காரில் 17 சதவிகிதம் புரோட்டோன் நிறுவனம் மாற்றங்கள் செய்துள்ளது. அரசாங்கத்திற்காக 3000 கார்களை எதிர்வரும் 3 வருட காலத்தில் அனைத்து அரசாங்க துறைக்கும் பகிர்ந்து வழங்கும் என்று தெளிவு படுத்தியுள்ளது.
ஆயினும், இக்கார் பொது மக்களுக்கு குருகிய காலத்துல் விற்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இவ்வகைக் காரை வாங்க குறைந்தது 2 வருட காலம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் புரோட்டோன் தலைமை நிர்வாகி டான்ஸ்ரீ முகமட் காமில் ஜாமில் தெரிவித்தார்.
8 ஆம் தலைமுறை ஹோண்டா ஏக் கோர்ட் காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த புரோட்டோன் பெர்டானா நீள ரக கார்களில் ஒன்றை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கும் மற்றொன்று துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசீனுக்கும் வழங்கப்பட்டது. பிரதமருக்கு வழங்கப்பட்ட காரின் எண் W11N என்பது குறிப்பிடதக்கது.